சங்க இலக்கியங்களில் தமிழகம் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததாகவும் தமிழ்நாட்டை தமிழகம் என்றும் அழைக்கலாம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது தமிழகத்தில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளதாகவும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்வதாகவும் தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும் என தெரிவித்திருந்தது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல அரசியல் கட்சிகளும் ஆளுநரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநரின் வேலைகளை விட்டு சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருகிறார் என தலைவர்கள் காட்டமாக ஆளுநரை சாடினர். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “தமிழகம் என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டை தமிழகம் என்றும் அழைக்கலாம்” என கருத்து தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவும் தமிழ்நாடு, தமிழகம் என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என கோவையில் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, L Murugan, RN Ravi, Tamil Nadu