ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு.. 5 பேரையும் கோவை அழைத்து சென்று போலீசார் விசாரணை!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு.. 5 பேரையும் கோவை அழைத்து சென்று போலீசார் விசாரணை!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு

Kovai car blast issue | கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகளுக்கும் அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 5 பேரையும் கோவை அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். வெடிபொருள் தயாரிக்க அவர் திட்டமிட்டிருந்த புகாரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், பெரோஸ் கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் மூன்று நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று அவர்கள் 5 பேரையும் கோவைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க | துப்பாக்கியை எடுக்க தயங்காதீங்க.." போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை

உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, ஜி.எம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 5 பேரின் வீடுகளிலும், 5 குழுக்களாக பிரிந்து 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Crime News, Kovai bomb blast, NIA