முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான வழக்கறிஞரிடம் விசாரணை...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான வழக்கறிஞரிடம் விசாரணை...

சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான வழக்கறிஞரிடம் விசாரணை...

சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான வழக்கறிஞரிடம் விசாரணை...

Coimbatore | கோவை காவலர் பயற்சி பள்ளி வளாகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இதுவரை 303 பேரிடம் விசாரணையானது நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நாமக்கல் பகுதியை சேர்ந்த  வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. 

வழக்கறிஞர் செந்தில் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமானவர். சசிகலா ,ஜெயலலிதா தொடர்பான  வழக்குகளை கையாண்டவர். உதகை பதிவு எண் கொண்ட காவல் துறை வாகனத்தில் வழக்கறிஞர் செந்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். கோவை சரக  டி.ஐ.ஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Also see... பாலியல் தொழில் போட்டி.. ஹோட்டல் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு...

பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வழகறிஞர் செந்திலிடம் விசாரணை நடத்தப்படுவதற்கான காரணங்கள் வெளியிடப்பட வில்லை. கடந்த வாரம் இவ்வழக்கு உதகை நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கேரளா, கர்நாடக மாநிலங்களில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Coimbatore, Kodanadu estate, Sasikala