முகப்பு /செய்தி /Coimbatore / கோடநாடு கொலை கொள்ளை வழக்கு... மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் விசாரணை...

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு... மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் விசாரணை...

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜிவோரா

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜிவோரா

Kodanadu case | கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜிவோரா என்பவரிடம் தனிப்படை போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

  • 1-MIN READ
  • Last Updated :

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்ற வருகிறது. 5 தனி படைகள் பல்வேறு கோணங்களில்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சிஐடி நகரில் 2017-ல்  வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடநாடு பங்களாவில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் சிஐடி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில்  தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த குடியிருப்பில் இருந்து  5 முக்கிய தொழிலதிபர்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த தொழிலதிபர்களை தனித்தனியாக அழைத்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே செந்தில் பேப்பர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் குமார் , ஓசேன் ஸ்பிரே மற்றும் மகாலட்சுமி ஜுவல்லரி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் நவீன் பாலாஜி ஆகியோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

கோடநாடு பங்களா

இந்நிலையில் இன்று  மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜிவோரா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு துவங்கிய விசாரணை பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் தனது உதவியாளருடன் தொழிலதிபர் லாஜிவோரா கிளம்பி சென்றார். இந்நிலையில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சிலரையும் தனிப்படை போலீசார் சம்மன் கொடுத்து அழைத்து இருந்தனர்.

Also see... முகநூல் காதலியை தேடி சென்ற இளைஞர் மாயம்

இதில் 5  பேர் இன்று  விசாரணைக்கு ஆஜரான நிலையில்  அவர்களிடமும் தனிப்படை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Jayalalitha, Kodanadu estate, Madurai