ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை அருகே ஆலாந்துறையில் 1000 ஆண்டுகள் பழமையான கருப்பராயர் சிலை மாயம்

கோவை அருகே ஆலாந்துறையில் 1000 ஆண்டுகள் பழமையான கருப்பராயர் சிலை மாயம்

போலீசாரிடம் புகார் அளிக்கும் கிராம மக்கள்

போலீசாரிடம் புகார் அளிக்கும் கிராம மக்கள்

கோவை ஆலாந்துறை அருகே உள்ள பழங்குடி கிராமத்தில் வைத்திருந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருப்பராயர் சிலை மாயமான சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை ஆலாந்துறை அடுத்த நல்லூர் வயலில் உள்ள பழங்குடி கிராமத்தில் சுற்றுவட்டார 7 கிராமத்திற்கு சொந்தமான குல தொய்வம் சடையாண்டியப்பன் கோவில் உள்ளது.  சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் இந்த கோவிலில் அந்த 7 கிராமங்களும் விஷேச நாட்களில் சிறப்பு வழிபாடு செய்து வந்தனர். மேலும் அந்த கோவிலில் செய்யப்படும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பழங்குடி கிராம மக்களின் நம்பிக்கை.

  அந்த கோவிலில் விநாயகர், மற்றும் கருப்பராயன் சிலையும் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவிலில் விளக்கேற்றப்பட்டு வரும் நிலையில் நேற்று வழக்கம் போல கோவிலுக்கு ஊர் மக்கள் சென்ற போது  அங்கிருந்த சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான  2.5 அடி கருப்பராயர் கற்சிலை மாயமனது தெரியவந்தது.

  இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ஒன்று கூடினர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஆலாந்துறை மற்றும் காருண்யா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also see... யானைக்குட்டி இறந்துடுச்சு... இரவோடு இரவாக நிலத்தில் புதைத்த விவசாயி.. தேடிப்பிடித்த வனத்துறை!

  முதல் கட்டமாக சுற்றுவட்டார கிராம மக்களிடம் விசாரித்து வருகின்றனர். மிகவும் நம்பிக்கைக்கு உரிய கோவிலில் கருப்பராயன் சிலை மாயமானதால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  செய்தியாளர்: வைரம்பெருமாள், கோவை  

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ancient statues, Coimbatore