Home /News /coimbatore /

”நான் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டும் தந்தையல்ல” - கமல்ஹாசன் மேடையில் உருக்கம்!

”நான் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டும் தந்தையல்ல” - கமல்ஹாசன் மேடையில் உருக்கம்!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

என்னை இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை என சொல்கின்றனர். ஆனால் `பெற்றால்தான் பிள்ளையா' என்ற அமைப்பு மூலம் 2,000 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாக கோவையில் நடந்த மகளிர் விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக பேசினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக, மகளிருக்கான  மய்யம் விருதுகள்  வழங்கும்  நிகழ்வு  நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு கமல்ஹாசன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

    பின்னர்  விழாவில் பேசிய கமலஹாசன் , உலகில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் சாமானியர்கள் எனவும், மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும், புலம்புவதால் பிரயோஜனம் இல்லை எனவும், காந்தி வந்தவுடன் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை பொறுமையாக இருந்து  தன் பணியை செய்து முடித்து விட்டு போனார் எனவும் தெரிவித்தார்.

    பார்வையாளர்கள் அனைவருமே மாற்றத்தின் விதைகள் என தெரிவித்த அவர், பீடிகைகளுக்கு நேரமில்லை, வேலையில் இறங்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்கின்றோம்  எனவும் தெரிவித்தார்.

    மகளிர் சாதனையாளர் விருது ஆண்டுதோறும் வழங்கி இருக்கின்றோம் என தெரிவித்த அவர், இரண்டு முறை புடவை கட்டி பெண்ணாக நடித்து இருக்கின்றேன். அப்போதே பெண்ணாக பிறந்த இருக்கலாமோ என்று எனக்கும் தோன்றி இருக்கிறது. ஏனென்றால், பெண்ணாக பிறப்பது பெருமைப்படக்கூடியது எனவும் தெரிவித்தார்.

    Read More; எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது கிடைத்த வரவேற்பு ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது - ஆர்.எஸ்.பாரதி.0

    என்னை இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை என சொல்கின்றனர்.  எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு பிறந்த 35,000 குழந்தைகளையும் எய்ட்ஸ் நோய் தாக்கியது. அவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை எனக்கூறப்பட்டது. ஆனால்  அவர்களிலிருந்து 2,000 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களின் தந்தையாக செயல்பட்டேன். அதற்காக, `பெற்றால்தான் பிள்ளையா' என்ற அமைப்பை உருவாக்கினோம். அதனால் இரு பெண்களுக்கு மட்டும் நான் தந்தையல்ல.

    பெண்களை பெருமை படுத்துகிறோம் என்ற பெயரில் தாய் நாடு, தாய் மண் என்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்றால், பின்னால் செய்யலாம் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர். அந்த வாக்குறுதியை, அழுத்தம் கொடுத்து பெண்கள்தான் செய்ய வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    அரசியல் வேண்டாம் என்றால் விலகினால் வேறு வழியாக அரசியல் வரும் என தெரிவித்த அவர், நீங்கள் அமைதியாக இருப்பதுதான் பேராபத்து என்றும் தெரிவித்தார். ஓட்டையாவது போடுங்கள் , ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து ‘நான் பணம் கொடுக்க மாட்டேன்’ என தெரிவித்த கமல், உங்கள் மதிப்பை விட குறைவான பணம் வாக்குக்கு கொடுக்கின்றனர் எனவும், கோபம் வர வேண்டும் , ரௌத்திரம் பழக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    நாட்டுப்புற கலைகளில் இளைஞர்கள் இருப்பது பெருமகிழ்ச்சியை கொடுக்கின்றது, அடுத்த தலைமுறை ஆடிப்பார்க்க வேண்டும் என்ற விருப்பம்  நிறைவேறி இருக்கின்றது எனவும் தமிழுக்கு மிக நெருக்கமானவன்நான் எனவும் தெரிவித்தார்.

    கலையை பற்றி பேசாமல்,  அரசியல் பற்றி பேசினால் அது வெறும் மண் எனவும், கலைதான் என்னுடைய மண்ணின் மனத்தை உணர்த்தும் எனவும் தெரிவித்தார்.

    Read More: தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

    இன்னும் இடது, வலது என அல்லாடிக்கொண்டு இருக்கின்றனர், வெளிநாடுகளில் இடது, வலது ஆகியவற்றை தாண்டி மைய கருத்துக்கு வர துவங்கி இருக்கின்றனர். நான் ஆசியாவின் முதல் மய்ய கருத்தாளன் என்றும் தெரிவித்தார். அனைவரும் மய்யத்திற்கு வாருங்கள் நியாயத்திற்கு வாருங்கள் என ம.நீ.ம தலைவர் கமலஹாசன் பேசினார்.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Coimbatore, Kamal Haasan

    அடுத்த செய்தி