Home /News /coimbatore /

நகைக்கடையில் 2 சவரன் நகை திருட்டு... சிசிடிவி காட்சிகள் வைரல்

நகைக்கடையில் 2 சவரன் நகை திருட்டு... சிசிடிவி காட்சிகள் வைரல்

நகைக்கடை திருட்டு- சிசிடிவி வீடியோ

நகைக்கடை திருட்டு- சிசிடிவி வீடியோ

Coimbatore | கோவை மாவட்டம் அன்னூரில் நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல நடித்து 2 சவரன் தங்க நகையினை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Annur
கோவை மாவட்டம் அன்னூரில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று  பிற்பகல் இக்கடைக்கு வந்த நபர் ஒருவர் கடையில் இருந்த ஊழியரிடம்  தன்னை வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்தி கொண்டு நகை டிசைன்களை காட்டுமாறு கூறியுள்ளார். கடை ஊழியர் கடைக்குள் வேறு டிசைன் நகைகளை எடுக்க சென்ற நேரத்தில் 2 சவரன் தங்க நகையினை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் வெளியே ஓடிவந்து பார்ப்பதற்குள் அந்த நபர் தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see... புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லையென புகார்... பெற்றோர்கள்போராட்டம்



இந்நிலையில் டிப்டாப் உடையணிந்து வந்த நபர் கடையில் நகையினை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CCTV Footage, Coimbatore, Jewelry shop

அடுத்த செய்தி