ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஜமோஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வராத ஜமாத் நிர்வாகங்கள்.. கோவையில் பரபரப்பு..!

ஜமோஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வராத ஜமாத் நிர்வாகங்கள்.. கோவையில் பரபரப்பு..!

உயிரிழந்த ஜமோசா முபின்

உயிரிழந்த ஜமோசா முபின்

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மனிதாபிமான அடிப்படையிலிம், போலீஸ் அதிகாரிகள் கேட்டு கொண்டதன் பேரிலும் அடைக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது,.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமோசா முபீனின் உடலை அடக்கம் செய்ய ஜமாத் நிர்வாகங்கள் முன் வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

  கோவை உக்கடம் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகே ஞாயிறு அதிகாலை நான்கு மணியளவில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபீன் என்பவர் இறந்தார்.

  பழைய துணி விற்பனையாளரான அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், அலுமினியம் பவுடர், சார்க்கோல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சனிக்கிழமை நள்ளிரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபீனுடன் 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை அவர்கள் ஐந்து பேரும் தூக்கிச் சென்றதும் பதிவாகி இருந்தது.

  சிசிடிவி காட்சிகளில் உள்ள 4 பேர் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கார் வெடி விபத்து தொடர்பாக குன்னூரை அடுத்த ஓட்டுப்பட்டரை பகுதியை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ALSO READ | திருமண ஆசைக்காட்டி 10ம் வகுப்பு மாணவியை சீரழித்த இளைஞர்- காதலனை நம்பிசென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

  இந்நிலையில், ஜமேஷாவின் உடல் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர், நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம். இதனால் பலரும் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தார்.மேலும், ஒருவரது உடலை அடக்கம் செய்ய வேண்டுமானால், ஏதாவது ஒரு ஜமாத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும், அவர் உறுப்பினராக இல்லை என்பதால், அவரை அடக்கம் செய்ய அனுமதி கடிதம் கொடுக்கப்படவில்லை என கூறினார்.

  இந்த நிலையில் கோவை பூமார்க்கெட்டில் உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில் லங்கர்கானா அடக்கஸ்தலத்தில் மனிதாபிமான அடிப்படையிலிம், போலீஸ் அதிகாரிகள் கேட்டு கொண்டதன் பேரிலும் அடைக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Crime News