Home /News /coimbatore /

காட்டு யானையை தேடும் பணி தீவிரம் - கொண்டனூர் வனப்பகுதியில் வனத்துறை முகாம்

காட்டு யானையை தேடும் பணி தீவிரம் - கொண்டனூர் வனப்பகுதியில் வனத்துறை முகாம்

காயமடைந்த காட்டு யானையை தேடும் பணி தீவிரம்

காயமடைந்த காட்டு யானையை தேடும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே கொண்டனூர் வனப்பகுதியில் நான்காவது நாளாக காயமடைந்த காட்டு யானை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த முயற்சி 4 வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வனத்துறைனர் 7  குழுக்களாக பிரிந்து ஊக்கையனூர், கொண்டனூர், பனப்பள்ளி ஆகிய  வனப்பகுதிகளுக்குள் காயத்துடன் சுற்றி திரியும் யானையை  தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயத்துடன் சுற்றி திரியும்  யானை அடர் வனப்பகுதிக்குள் சென்று விட்டதால், அதை பின் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் யானை நீர் நிலைகளின் அருகில் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் நீர்நிலைகளை ஒட்டியிருக்கும் பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யானையை தேடும் பணி தீவிரம்


கொண்டனூர் வனப்பகுதியில் பலாப்பழங்களுடன் வனத்துறை ஊழியர்கள் வனத்திற்குள் சென்றுள்ளனர். யானை தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதாலும், யானை கூட்டங்களுடன் சேர்ந்து கொள்வதாலும் காயம் ஏற்பட்டுள்ள யானையை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கின்றது. எனினும் காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வனத்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தி இருப்பதால் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Must Read : சகோதரி அஸ்வினி குரல்.. திமுக ஆட்சிக்கு கொடுத்த சம்மட்டி அடி - அண்ணாமலை பேச்சு

நேற்று முன் தினம் யானை வனத்துறையினரின் கண்ணில் பட்ட நிலையில் அதன் பின்னர் யானை தென்படவில்லை. வனத்துறை மருத்துவகுழுவினரும், கும்கி யானைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வனப்பகுதிக்குள்  யானையை தேடும் பணி 4 வது நாளாக தொடர்கின்றது.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Elephant, Injured

அடுத்த செய்தி