Home /News /coimbatore /

வில்லங்கத்தில் முடிந்த இன்ஸ்டா பழக்கம்.. ஒருதலைக்காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

வில்லங்கத்தில் முடிந்த இன்ஸ்டா பழக்கம்.. ஒருதலைக்காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

காதலிக்க மறுத்த பெண்ணை  கொலை செய்ய முயன்ற தினேஷ்..

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முயன்ற தினேஷ்..

Crime News | காதலை ஏற்க மறுத்த பெண்ணின் அலுவலகத்திற்குள் சென்று  பெண்ணை சக ஊழியர்கள் முன்னால் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம்  கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததால் , அவர் பணிபுரியும் இடத்திற்கே வந்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற  இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பைனான்ஸ் துறையில் பயிற்சி பெற்று வருகின்றார். அந்த பெண்ணிற்கு சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (26) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இருவரும் இன்ஸ்டாவில் சாட்டிங் செய்து வந்துள்ளனர். அதன்பின் இருவரும் செல்போன் எண்களை பரிமாற்றி பேசி வந்துள்ளனர். நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், தினேஷ் அந்தப்பெண்ணை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை வந்து அந்தப்பெண்ணை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இளம்பெண்ணோ நட்பாகவே தினேஷுடன் பழகியதாக கூறி காதலை ஏற்க மறுத்துள்ளார். மேலும் தினேஷுடனான தொடர்பையும் துண்டித்துள்ளார். செல்போனில் அவரது எண்ணை ப்ளாக் செய்துள்ளார்.  அந்தப்பெண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் தினேஷ் ஆத்திரமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் பணியாற்றும் தனியார் கார் நிறுவனத்திற்கு சென்று தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி மிரட்டியுள்ளார்.

Read More : பரபரப்பான சாலையில் இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்


அந்த பெண் மறுக்கவே தினேஷ் தான்மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் முகம், தோள்பட்டை, தலை பகுதியில் குத்தி காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த நிறுவன ஊழியர்கள் தினேஷை மடக்கிப் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து தினேஷை கைது செய்த போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காயம் அடைந்த பெண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலை ஏற்க மறுத்த பெண்ணின் அலுவலகத்திற்குள் சென்று பெண்ணை சக ஊழியர்கள் முன்னால் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Coimbatore, Crime News, One Sided Love

அடுத்த செய்தி