Home /News /coimbatore /

காயமடைந்த காட்டு யானையை தேடும் பணி 3வது நாளாக தீவிரம்.. கும்கி யானை அரிசிராஜாவை களம் இறக்கியது வனத்துறை

காயமடைந்த காட்டு யானையை தேடும் பணி 3வது நாளாக தீவிரம்.. கும்கி யானை அரிசிராஜாவை களம் இறக்கியது வனத்துறை

கும்கி யானை

கும்கி யானை

Elephant : கோவை மாவட்டம் ஆனைகட்டி ஊக்கையனூர் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் 3வது நாளாக தீவிர தேடுதலில் இறங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கோவை மாவட்டம் ஆனைகட்டி ஊக்கையனூர் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் 3வது நாளாக தீவிர தேடுதலில் இறங்கியுள்ளனர். 2 கும்கி யானைகள், 3 மருத்துவ குழுக்கள், 70 வனப்பணியாளர்கள், டிரோன் கேமரா என காயமடைந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் 8 வயது மதிக்கதக்க காட்டு யானை வாயில் காயத்துடன், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழக வனத்துறையினர் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் அது வனப்பகுதிக்குள் சென்றது. இந்நிலையில்  இரு தினங்களாக தமிழகம்  மற்றும் கேரள வனப்பகுதிகளில் காட்டு யானையை தேடும் பணி நடைபெற்று வந்தது. மொத்தம் 11 குழுக்கள் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலை தமிழக வனப்பகுதியில் காயம் அடைந்த காட்டுயானை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோவை தோலாம்பாளையம் வனப்பகுதியில் செங்குட்டை என்னும் இடத்தில் காட்டு யானை இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் வனத்துறையினர் நேற்று மாலை யானையை பிடிக்க முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் யானையை பிடித்து சிகிச்சை அளிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. ஆனால் வனத்துறையினர் யானையை தொடர்ந்து பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காட்டு யானை தோலாம்பாளையம் வனப்பகுதியில் இருந்து ஊக்கையனூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

காட்டு யானை


வனத்துறை குழுவினர் காட்டு யானையை தொடர்ந்து பின்தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 3 மருத்துவ குழுக்கள், 70 வனப்பணியாளர்கள், டிரோன் கேமரா சகிதமாக காயம் அடைந்த  யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது தவிர டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கலீம் மற்றும் முத்து என்கிற இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. காயமடைந்த காட்டு யானையை கண்ட  பின் அதை சமதளத்திற்கு கொண்டு வரவும், மயக்க மருத்து செலுத்தி சிகிச்சை அளிக்கவும் கும்கி யானைகளை பயன்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதில் முத்து என்கிற அரிசிராஜா கும்கி யானை கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சி அருகே அர்த்தனாரி பாளையம் பகுதியில் பிடிக்கப்பட்டது. இரு வருடங்களாக கும்கி பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக காட்டுயானையை பிடிக்க கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Coimbatore, Elephant

அடுத்த செய்தி