Home /News /coimbatore /

இஞ்சி இடுப்பழகி... திமுக பெண் கவுன்சிலர்கள் பாட்டு பாடி அசத்தல்.. வைரலாகும் வீடியோ

இஞ்சி இடுப்பழகி... திமுக பெண் கவுன்சிலர்கள் பாட்டு பாடி அசத்தல்.. வைரலாகும் வீடியோ

திமுக பெண் கவுன்சிலர்கள்

திமுக பெண் கவுன்சிலர்கள்

கோவை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம் இணைந்து நடத்திய இன்னிசை நிகழ்வில் மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர்கள் பாடல்கள் பாடி பொது மக்களை உற்சாகப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம் இணைந்து நடத்திய இன்னிசை நிகழ்வில் மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர்கள் பாடல்கள் பாடி பொது மக்களை உற்சாகப்படுத்தினர்.

    கோவை மாநகராட்சி மற்றும் கோவை ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம்  இணைந்து பெரியகுளம் மற்றும் வாலாக்குளத்தில் பொது மக்கள் பொழுது போக்கிற்காக  இரு நாட்கள் பல்வேறு  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். "ஆல் இன் ஆல் அங்காடி"என்ற பெயரில் அரங்குகள் அமைத்து  பொருட்கள் விற்பனையும்  நடத்தப்படுகிறது. வார இறுதி நாட்களை மகிழ்வுடன் கழிக்க இந்த   ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக வாலங்குளம் பாலத்தின் கீழ்பகுதியில்  "இன்னிசை ஈவினிங்" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இதில் இசைக் குழுவினர் பாடல்கள் பாடி பொதுமக்களை உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மற்றும் பெண் கவுன்சிலர்கள் சாந்தி முருகன், வித்யா,சர்மிளா, முபசீரா ஆகியோர்  இணைந்து " இஞ்சி இடுப்பழகி" என்ற திரைப்பட பாடல்களை பாடி பொதுமக்களை உற்சாகப்படுத்தினர்.



    Read more: மின் கட்டண உயர்வுதான் திராவிட மாடல் போலும்... ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

    நேற்று மற்றும் இன்று ஆகிய இரு வார இறுதி நாட்களிலும்  காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இரு குளங்களிலும்   பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கான பொருள்கள் என பல்வேறு விதமான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Coimbatore, DMK

    அடுத்த செய்தி