நாட்டின் 75வது சுதந்திர தின விழா, நாடு முழுதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்திற்கு இன்னமும் 3 நாட்களே உள்ள நிலையில் இந்திய மக்கள் கொண்டாட்டத்தில் இறங்கி விட்டனர். இதற்காக இந்திய அரசு சார்பில் நமது இந்திய தேசிய கோடி அஞ்சலகங்களில் 25 ரூபாய்க்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இல்லந்தோறும் மூவர்ணம்' எனும் பிரசாரத்தை, மத்திய அரசு துவங்கியுள்ளது. இதனிடையே 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக சார்பில் பொதுமக்களிடையே தேசிய கொடியை கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் பாஜக விவசாயி அணி சார்பில் தேசியக்கொடி ஏந்தியவாறு டிராக்டர் பேரணி நடைபெற்றது.
75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 டிராக்டர்கள் கலந்துகொண்ட பேரணி நிகழ்ச்சியை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் A.P.முருகானந்தம், மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அப்போது பிரம்மாண்ட மூவர்ணக்கொடியை கைகளில் பிடித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கினர்.
அண்ணா காலனியில் தொடங்கிய பேரணி விவசாய தோட்டங்கள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பாஜக பொதுச் செயலாளர் முருகானந்தம் அளித்த பேட்டியின் போது பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகத்தில் இரண்டரை கோடி வீடுகளுக்கு மூவர்ணக் கொடி வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கட்சியை விட தேசம்தான் முக்கியம் தேசிய கொடியை ஏந்தி அனைவரும் பயணிக்க வேண்டும் என்பதுதான் பிஜேபியின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: நாங்கள் எந்த மாவட்டத்தில் இருக்கிறோம் எனத் தெரியவில்லை' - கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பாரத பிரதமர் விவசாயிகளுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஊர்வலம் நடைபெறுவதாக பாஜக பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Independence day