ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கள்ளக்காதல் விவகாரத்தில் மோதல்.. சொந்த அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதல் விவகாரத்தில் மோதல்.. சொந்த அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதல் விவகாரத்தில் மோதல்.. சொந்த அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதல் விவகாரத்தில் உடன்பிறந்த அண்ணனை, தம்பியே கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை மேட்டுபாளையத்தில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணனை, உடன்பிறந்த தம்பியே அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே திம்பம்பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ்.

  பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவரது மனைவி கமலா கருத்துவேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ரங்கராஜின் உடன்பிறந்த சகோதரர் குபேந்திரன். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.

  இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், குபேந்திரன் திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.அந்த பெண்ணுடன் அண்ணன் ரங்கராஜுக்கும் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.நீண்ட நாட்களாக இந்த பழக்கம் தொடர்ந்து வந்த நிலையில், அந்த பெண் குபேந்திரனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்

  Read More : காதலியை பெண் கேட்டதால் பெண்ணின் தந்தை தாக்குதல்... சோகத்தில் இளைஞர் தற்கொலை - திருவண்ணாமலையில் பரபரப்பு

  இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக அந்தப் பெண் சனிக்கிழமை ரங்கராஜ் வீட்டிற்கு வந்துள்ளார்.ரங்கராஜ் அந்தப் பெண்ணை வீட்டில் அமர வைத்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த குபேந்திரன் ஆத்திரமடைந்து அந்தப் பெண்ணையும் அவரது அண்ணனையும் திட்டியுள்ளார். இதனால் சகோதரர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நேரமாக சண்டை நடந்துள்ளது.

  ஆத்திரத்தில் இருந்த குபேந்திரன் அதிகாலை 2,30 மணியளவில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த படுகொலை குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குபேந்திரனை கைது செய்தனர்.அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் உடன்பிறந்த அண்ணனை, தம்பியே கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Coimbatore, Murder case