ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவையில் மருத்துவமனையிலேயே மனைவியை குத்திக் கொன்ற கணவன்

கோவையில் மருத்துவமனையிலேயே மனைவியை குத்திக் கொன்ற கணவன்

கொலை செய்தவர்

கொலை செய்தவர்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Tamil Nadu

கோவை தனியார் மருத்துவமனை வளாகத்தில் குடும்ப பிரச்னை காரணமாக செவிலியராக பணிபுரியும் மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த நான்சி(32) பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக  பணிபுரிந்து வந்தார். இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப தகராறு காரணமாக கணவர் வினோத்தை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று, மாலை மருத்துவமனைக்கு வந்த வினோத், மனைவி நான்சியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் மறைத்து வைத்திருந்த கத்தியால் நான்சியை மருத்துவமனையிலேயே வைத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் வினோத்தை மடக்கி பிடித்து, மருத்துவமனையின் தனி அறையில் அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நான்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALOS READ | தினமும் மது அருந்திவந்து தொல்லை... கணவனுக்கு விஷம் வைத்து கொன்ற மனைவி: நெல்லையில் பயங்கரம்..!

மேலும், நான்சியை கத்தியால் குத்தும் போது காயமடைந்த வினோத்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Coimbatore, Crime News, Kovai, Murder