Home /News /coimbatore /

பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை புகைப்படம் - தாய் என நினைத்து பேருந்துடன் ஓடிய குட்டி குதிரை.. வைரல் வீடியோ

பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை புகைப்படம் - தாய் என நினைத்து பேருந்துடன் ஓடிய குட்டி குதிரை.. வைரல் வீடியோ

குட்டி குதிரை

குட்டி குதிரை

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு சென்றதால், அதனை பிரிந்து குட்டி குதிரை வாடி தவித்து வந்தது. மேலும், தாயை தேடி அப்பகுதி முழுவதும் அலைந்தோடியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Perur
    பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படத்தை பார்த்து தாய் என நினைத்து பின்னாலே ஓடி சென்ற குட்டி குதிரையின் வீடியோ காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது. அங்குள்ள தோட்டத்தில் உள்ள புற்களை உணவாக சாப்பிட்டு பின்னர் அப்பகுதியிலேயே சுற்றி வருகிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு சென்றதால், அதனை பிரிந்து குட்டி குதிரை வாடி தவித்து வந்தது. மேலும், தாயை தேடி அப்பகுதி முழுவதும் அலைந்தோடியது.

    அந்த வகையில், நேற்று பேரூர் பேருந்துநிலையம் அருகே சென்ற தனியார் பேருந்தில், அதன் நிறத்திலான குதிரையின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட அந்த குட்டி குதிரை தனது தாய் தான் என நினைத்து பேருந்தையே உற்று நோக்கியது.



    மேலும், பேருந்தை செல்லவிடாமல் குதிரை புகைப்படத்தை சுற்றி சுற்றி வந்தது. இதனை மீறியும் பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால், தனது தாய் எங்கேயோ செல்கிறார் என நினைத்து குட்டி குதிரை பேருந்தை துரத்தி சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் குதிரையின் நிலையை கண்டு கண்கலங்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Coimbatore, Viral Video

    அடுத்த செய்தி