கோவையில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில்,
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் கருப்பையா, அவரது மனைவி ரதிபிரியா மற்றும் சங்கர் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்னசாமி தனது குடும்பத்துடன் நேற்று விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி உள்பட 4 பேர் மீது சென்னையை சேர்ந்த கருப்பையா என்பவர் செல்வபுரம் போலீசில் மோசடி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரசன்ன சுவாமிகள் ஜாமீன் கேட்டு ஜே.எம். 5 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் மோசடி புகாரால் மிகுந்த மனவேதனையில் இருந்த பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி, மகள் ஹர்சினி ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். முதல் மகள் ஷாலினி பயந்து கொண்டு விஷத்தை குடிக்க வில்லை. இந்நிலையில் 4 பேரும் விஷம் குடித்த தகவல் அறிந்த அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் அவர்களை மீட்டு கோவை அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பிரசன்ன சுவாமிகளின் தாய் கிருஷ்ணகுமாரி உயிரிழந்தார்.
பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி, மகள் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் செல்வபுரம் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஜோதிடர் பிரசன்ன சுவாமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீசாரிடம், ‘சென்னையை சேர்ந்த கருப்பையா இடம் பிரச்சனை சம்பந்தமாக என்னை அணுகிய போது, நான் புதிதாக கட்டிவரும் குபரேஷ்வரர் கோவிலுக்கு நன்கொடையாக 1 லட்சம் ரூபாயினை கருப்பையா கொடுத்தார்.
மேலும் படிக்க: ஊருக்குள் அபூர்வ நாகங்கள் படையெடுப்பு.. ஆபத்தான சூழலில் மலையடிவார கிராம மக்கள்...
அதன் பின்னர் 75 ஆயிரத்துக்கு காசோலை மற்றும் பிரதோஷ பூஜைக்காக 6 முறை ரூ. 2 ஆயிரம் கொடுத்தார் ஆனால் அவர் நான், என்னுடைய மனைவி உள்பட 4 பேர் , அவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 15 பவுன் செயினை வாங்கி மோசடி செய்து விட்டதாக பொய்யான புகார் அளித்துள்ளார்’ என கூறினார். இதனால் மனவேதனை அடைந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜோதிடர் அளித்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி ரதிபிரியா மற்றும் சங்கர் ஆகியோர் மீது தற்கொலைக்கு துண்டியதாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.