Home /News /coimbatore /

மோசடி வழக்கு... விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மோசடி வழக்கு... விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்து மக்கள் கட்சி பிரமுகர் பிரசன்னசாமி

இந்து மக்கள் கட்சி பிரமுகர் பிரசன்னசாமி

Coimbatore district News : மோசடி வழக்கு மன உளைச்சலில் இருந்த கோவையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், தாயார் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இந்து மக்கள் கட்சி பிரமுகரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னசாமி (41). ஜோதிடரான இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவராக இருந்து வந்தார்.  இந்த நிலையில் பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி ஆகியோர் 25 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை மோசடி செய்துள்ளதாக சென்னையை சேர்ந்த கருப்பையா என்பவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் பிரசன்னசாமி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீனும் கிடைக்கவில்லை. மோசடி புகாரால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரசன்னசாமி மற்றும் அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி, பிரசன்னசாமியின் மகள் ஆகியோர் கடந்த 3ஆம் தேதி விஷம் குடித்தனர். இது தொடர்பாக குடும்பமாக வீடியோவும் வெளியிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னசாமியின் தாய் கிருஷ்ணகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி அவர்களது மகள் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு பிரசன்னசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து உடற்கூறாய்வுக்காக பிரேத கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    Must Read : கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை

    இதையறிந்த பிரசன்னசாமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பந்தய சாலை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்,

    செய்தியாளர் - ஜெரால்ட்.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Suresh V
    First published:

    Tags: Coimbatore, Hindu Makkal Katchi

    அடுத்த செய்தி