இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து உரிமை பிரச்சார பயணம் வருகின்ற 28ம் தேதி திருச்செந்தூரில் தொடங்கி ஜூலை 31ம் தேதி சென்னையில் நிறைவடைவதாக அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கோவை காட்டூரில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வருகின்ற 28ம் தேதி திருச்செந்தூரில் இந்து உரிமை பிரச்சார பயணம் துவங்க இருப்பதாகவும், ஜூலை 31 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது எனவும் தெரிவித்தார். கோவை முத்தண்ணன் குளம் பகுதியில் இருந்த கோவிலை இடித்தபோது வேறு இடம் தருவதாக கூறிய நிலையில் இன்னும் இடம் ஒதுக்கவில்லை எனவும் விரைவில் இடத்தை ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கோவை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பலரையும் கைது செய்யாமல் தேடிவருவதாக காவல் துறை இன்னமும் கூறி வருகிறார்கள் என்று கூறிய அவர், உக்கடம் லாரிபேட்டை பகுதியில் பயங்கரவாதிகள் ரகசியமாக சில தினங்கள் முன்பு கூட்டம் நடத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்கிறது என குற்றம்சாட்டிய அவர், தொண்டாமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்களை பொது மக்கள் பிடித்து கொடுத்தும் போலிசார் முறையாக விசாரிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - ஓ.பன்னீர் செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
அக்னிபத் திட்டம் நல்ல திட்டமாக கருதுவதாகவும், இதில் சிறந்த பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். திமுகவின் சாதனை என்பது கோவில்களை இடிப்பதும், மடாதிபதிகளை மிரட்டுவதும் தான் என தெரிவித்த அவர், பள்ளி வாசல்களுக்கு கஞ்சிக்கு அரிசி கொடுப்பது போன்று, ஆடிமாத கூழ் ஊற்றுவதற்க்கும் அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.
மேலும் சிதம்பரத்தில் தீட்சதர்களை மிரட்டும் செயலை இந்துமுன்னனி வன்மையாக கண்டிக்கிறது எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Munnani