Home /News /coimbatore /

கோவை மேம்பாலத்தில் தொடர் விபத்துகளுக்கு காரணம் என்ன? சென்னை ஐஐடி குழு அறிக்கை

கோவை மேம்பாலத்தில் தொடர் விபத்துகளுக்கு காரணம் என்ன? சென்னை ஐஐடி குழு அறிக்கை

கோவை மேம்பாலம்

கோவை மேம்பாலம்

Coimbatore | கோவை சுங்கம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் வேகமாக வந்ததே காரணம் என பாலத்தை ஆய்வு செய்த சென்னை ஐஐடி குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மேலும் விபத்தை தவிர்ப்பது குறித்து ஆலோசனைகளையும் அந்த குழு கோவை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவையில் திருச்சி சாலை ரெயின்போ பகுதியிலிருந்து, பழைய பங்குசந்தை அலுவலகம் வரை சுமார் 3.15 கிலோமீட்டர் நீளத்திற்கு சுமார் 253 கோடி மதிப்பீட்டில் கட்டபட்ட பாலத்தில்  கடந்த ஜூன் மாதம்  முதல் போக்குவரத்து துவங்கபட்டது. பாலம் திறக்கப்பட்டதில் இருந்து  இதுவரை மூன்று பேர் விபத்தில் உயிரிழந்தனர். 

சுங்கம் பகுதியில் உள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து நடைபெற்று வருவதாக கூறிய நிலையில் வளைவில் பேரிகார்டுகள், வேகதடை, இரும்பு தடுப்புகள் போன்றவை  அமைக்கப்பட்டது. பாலத்தில் ஏற்படும்  விபத்துகளை தடுப்பது குறித்து சென்னை ஐஐடி இணை பேராசிரியர் கீதா கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கபட்டது.

இந்த குழுவினர் கடந்த ஜூலை மாத இறுதியில் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது ஐஐடி இணை பேராசிரியர் கீதா கிருஷ்ணன் அந்த ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம்  சமர்பித்துள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் விபத்துக்கள் ஏற்பட்ட சுங்கம் பகுதியில் இரண்டு கூர்மையான கிடைமட்ட வளைவுகள் உள்ளன எனவும் பாலத்தில் செல்லும்  வேகம் 40 கி.மீ என வடிவமைக்ககபட்டுள்ளது எனவும், பாலத்தில் ஏற்பட்ட விபத்துகள் அதிவேகத்தின் காரணமாகவே நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 40 கி.மீ வேகத்தில் சாலை சீரமைப்பு பாதுகாப்பானது எனக்கு றிப்பிட்டுள்ள கீதா கிருஷ்ணன், விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்க இரண்டு குறுகிய கால நடவடிக்கைகளையும் பரிந்துரை செய்துள்ளார். அதில் சுங்கம் பகுதியில் உள்ள வளைவுகளுக்கு 150 மீட்டருக்கு முன்பாகவே  எல்.இ.டி திரையுடன் கூடிய எச்சரிக்கை சாதனங்கள் வைக்கபட்டு, ஓட்டுநர்களின் வேகம் மற்றும் எச்சரிக்கை குறிப்புகள் வழங்கபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see... சாப்பிட்டு பணம் தராமல் தகராறு: இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

மேலும் இருசக்கரவாகனங்கள் தூக்கி எறியபடுவதை தடுக்க, தடுப்புகளில் இரப்பர் போன்ற ரோலர் வகை அல்லது  வலைபோன்ற தடுப்புகளை ஏற்படுத்தினால் விபத்துகளை தடுக்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளார். மேலும் அதிதீவிர சந்தர்ப்பங்களில் வேகத்தடைகளும் விபத்துகளை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள கீதா கிருஷ்ணன், பரிந்துரைக்கப்பட்ட வேககண்காணிப்பு சாதனங்கள் மற்றும் தடுப்புகள் நிறுவிய பிறகு வேகதடைகளை  அகற்றலாம் என பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai IIT, Coimbatore, Longest Bridge, Road accident

அடுத்த செய்தி