முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கொட்டித்தீர்க்கும் கனமழை..118 அடியை எட்டிய ஆழியார் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொட்டித்தீர்க்கும் கனமழை..118 அடியை எட்டிய ஆழியார் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியார் அணை

ஆழியார் அணை

Pollachi | பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்துக் கொண்டிருக்கிறது. அதனால்  120 அடி கொண்ட ஆழியார் அணை நீர்மட்டம் 118 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த மாதம் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வந்தது.  இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வால்பாறை, காடம்பாறை, அப்பராலியாறு, போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் முக்கிய அணைகளான, பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணை பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த மழையின் காரணமாக அப்பர் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் 120அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென என உயர்ந்து 118 அடியை எட்டியது.  ஆழியார் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால்  அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக, சுமார் வினாடிக்கு 3000கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆழியார் அணை

Also see... கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த இளைஞர் மாயம்....

உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆழியார் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆனைமலை, அம்பராம் பாளையம், ஆத்து பொள்ளாச்சி, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி

First published:

Tags: Coimbatore, Pollachi