ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஓடும் பேருந்தில் டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி..  உயிர் பிரியும் நேரத்தில் பயணிகளை காத்த ஓட்டுனர்

ஓடும் பேருந்தில் டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி..  உயிர் பிரியும் நேரத்தில் பயணிகளை காத்த ஓட்டுனர்

நெஞ்சுவலியால் ஒட்டுனர் மரணம்

நெஞ்சுவலியால் ஒட்டுனர் மரணம்

தன் உயிர் பிரியும் நேரத்திலும் பேருந்தில் இருந்த பயணிகளை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்தை தடுப்பு சுவற்றில் மோதி நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pollachi, India

  பொள்ளாச்சியில் ஓடும் அரசு பேருந்தில் பேருந்து ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு பேருந்து சாலை ஓரத்தில் நிறுத்தியதால் 34பயணிகள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.

  பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுனர் மருதாச்சலம் (வயது - 59) இவர் இன்று வழக்கம் போல் பணிக்கு வந்து போக்குவரத்து பணிமனை ஒன்றில் இருந்து ஜமீன் ஊத்துக்குளி, வக்கம்பாளையம், வழியாக இயக்க கூடிய "7A" என்ற என் கொண்ட அரசு பேருந்தை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 34 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்கரை சாலை வழியாக செல்லும்போது ஓட்டுனர் மருதாசலத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியதாக கூறப்படுகிறது.

  தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை உணர்ந்த ஓட்டுநர் மருதாச்சலம் உடனே பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்த முற்பட்ட போது அருகில் இருந்த ஒரு தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.  பின்னர் ஓட்டுனரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மருதாச்சலம் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

  Also Read: ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய தேனி காவல்துறையினர்.. 

  தன் உயிர் பிரியும் நேரத்திலும் பேருந்தில் இருந்த பயணிகளை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்தை தடுப்பு சுவற்றில் மோதி நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்..

  மேலும் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதமே இருந்த நிலையில் ஓட்டுனர் மருதாச்சலம் உயிரிழந்தது சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

  செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Heart attack, Pollachi, Tamil News