ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

தொடரும் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்... அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!

தொடரும் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்... அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்த வேலை நிறுத்தம் காரணமாக மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சிகளில்  தூய்மை பணிகளில்  தேக்கம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Coimbatore | Coimbatore

    கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளத்தை ஒப்பந்தார்கள் வழங்குவதில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்நிலையில்  தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள கூலியை வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர் சங்கத்தினர்,  கூட்டமைப்பை ஏற்படுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

    கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சிகளில்  தூய்மை பணிகளில்  தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சிஐடியு, அருந்ததியர் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம், ஜனசக்தி லேபர் யூனியன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் ஆகிய தூய்மை பணியாளர் சங்கத்தினர் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களிடம் காவல்துறையினர் காலையில் கைது நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Cleaning workers, Coimbatore, Kovai, Protest