Home /News /coimbatore /

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்.. திமுகவினர் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்.. திமுகவினர் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

70 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்,  மற்ற வாக்குறுதிகளும் விரைவாக  நிறைவேற்றப்படும் - முதல்வர் ஸ்டாலின்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கும், இழிசொல்லுக்கும் பதிலளிக்க  நேரமில்லை எனவும், மக்களுக்கான பணிகளை செய்து பாராட்டுகளை வாங்கவே விரும்புகின்றேன் என பொள்ளாச்சி திமுக  பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியில் திமுக பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், அக்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். கவுண்டம்பாளையம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, தேதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், முன்னாள் பாஜக மாநில மகளிரணிச் செயலாளர் மைதிலிவினோ  உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர்  ஸ்டாலின், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களை, மாற்றான்தாய் மனப்பான்மை என நினைக்கவில்லை, நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என நினைக்கின்றேன், சேர வேண்டிய இடத்திற்கு வந்து இருக்கின்றீர்கள் என தெரிவித்தார்.  உங்களது முக மலர்ச்சி எனது மன மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது என தெரிவித்த அவர்,அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு செயலில் இறங்கினால், அது பாராட்டுக்குரிய செயலாக இருக்கும், இன்னும் பலரும் இந்த இயக்கத்தை நோக்கி வர தயாராக காத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

மாற்றுக்கட்சியினர் 50 ஆயிரம் பேர் இணைகிறார்கள் என அமைச்சர் செந்தில்பாலாஜி வெறுமனே கணக்கு காட்டவில்லை, பட்டியலை ஆதாரத்துடன் என்னிடம் தந்தார் எனவும் எண்ணிக்கையை விட எண்ணம் முக்கியம் என நினைப்பவர் செந்தில் பாலாஜி எனவும் தெரிவித்தார்.
ஆச்சிப்பட்டி எனக்கு ஆச்சரியப்பட்டியாக காட்சியளிக்கிறது என தெரிவித்த அவர்,தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் திமுகவின் கொள்கைகளை, நமது கொள்கைகளை கொண்டு செயல்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமதர்ம சமுதாயம் அமைப்பதே இலக்கு - கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

திமுக கட்சி துவங்கி 19 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது என தெரிவித்த அவர், சிலர் கட்சி துவங்கியதும் அடுத்த எங்க ஆட்சி , அடுத்த முதலமைச்சர் என்கின்றனர் என தெரிவித்த அவர், நம்மைப் போல வெற்றி, தோல்வி பெற்ற கட்சி நாட்டில் யாரும் இருக்க முடியாது எனவும், நாம் அடையாத புகழும், அவமானமும், சாதனையும், வேதனையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
70 ஆண்டுகள் கடந்தும் கட்சி நீடிக்க காரணம் நாம் கொள்கைக்காரர்கள் என்பது தான், அக்கொள்கைக்காக உயிரையும் தர தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

திமுக


அண்ணா, கருணாநிதியால் வளர்க்கப்பட்ட கட்சி, இது அரசியல் கட்சி மட்டுமல்ல, கொள்கை கோட்டை என தெரிவித்தார். இங்கு கட்சிக்காரராக அல்லாமல் கொள்கைக்காரர்களாக செயல்பட வேண்டும் எனவும் திராவிடம் என்பது சமூக நீதி, சம நீதி, இன உரிமை, மாநில உரிமை, கூட்டாட்சி தத்துவம் என தெரிவித்தார்.  திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கை கொண்டது என தெரிவித்த அவர், திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

70 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்,  மற்ற வாக்குறுதிகளும் விரைவாக  நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்த அவர், தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் எனவும் தெரிவித்தார். எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கும், இழிச்சொல்லுக்கும் பதிலளிக்க எனக்கு நேரமில்லை, பிற கட்சி  தலைவர்களை நான்  விமர்சிக்க போவதில்லை என தெரிவித்த அவர், மக்களுக்காக பாடுபட்டு மக்கள் பாராட்டுகளை பெற வேண்டும் என விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் பணிக்கு தயாராகிக் கொள்ளுங்கள் என தெரிவித்த அவர், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் கட்சி கொள்கை, லட்சியம், வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் எனவும்,  கருப்பு, சிவப்பு மனிதராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், ஆட்சிக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இணைந்து பணியாற்ற 55 ஆயிரம் பேரை அமைச்சர் செந்தில் பாலாஜி இணைந்துள்ளது கட்சியின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு எனவும் முதல்வர் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

 
Published by:Murugesh M
First published:

Tags: CM MK Stalin, DMK, Senthil Balaji

அடுத்த செய்தி