Home /News /coimbatore /

கோவையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிவாயு குழாய்... அதிர்ச்சி வீடியோ

கோவையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிவாயு குழாய்... அதிர்ச்சி வீடியோ

கோவையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிவாயு குழாய்...

கோவையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிவாயு குழாய்...

Coimbatore | மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் கோவையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவையில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் குழாய்களில் சோதனை நடத்தியபோது, திடீரென வாயு வெளியேறியதால் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், மக்கள் அலறியடித்து ஓடினர்.

    கோவையில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இதையொட்டி, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் சாலையோரங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய காற்று மற்றும் தண்ணீர் கொண்டு பரிசோதனை செய்ததாகக் கூறப்படுகிறது.

    அப்போது, வியாழக்கிழமை நண்பகல் நேரத்தில் எதிர்பாராத விதமாக குழாயில் கசிவு ஏற்பட்டு, காற்று வெளியேறியது. பின்னர் 15 அடிக்கு தண்ணீர் வெளியேறியது. மேலும், எரிவாயு குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். காலை அல்லது மாலை நேரத்தில் இதுபோன்று நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    Also see... சாலையைக் கடக்க முயன்றபோது விபரீதம்.. அரசுப்பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு



    இதுகுறித்து அப்பகுதியில் ஹோட்டல் வைத்திருக்கும் வேளாங்கண்ணி கூறும் போது, இன்று ஜேசிபி மூலம் வழக்கம் போல தோண்டும் பணி நடைபெற்றது. திடீரென பாம் வெடித்தது போல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தால் தொடர்ச்சியாக வெடித்துக் கொண்டிருந்தது. இதிலிருந்து தண்ணீர் அதிகமாக பீச்சியடித்தது. இதை கண்ட ஜேசிபி ஓட்டுநர் ஓடி விட்டார். பொதுமக்கள் அனைவரும் சாலையை கடக்கும் போது தப்பிவிட்டனர் என தெரிவித்தார்.

    செய்தியாளர்: ஜெரால்டு, கோவை 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Blast, Coimbatore, Gas Problem, Pipe

    அடுத்த செய்தி