Home /News /coimbatore /

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி - தனியார் வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி - தனியார் வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் கைது

கைது செய்யப்பட்ட முருகன்

கைது செய்யப்பட்ட முருகன்

Coimbatore district News: கோவை சித்தாபுதூர் பகுதியில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி , வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு  மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கோவை சித்தாபுதூர் பகுதியில் என்.ஜே. பிளேஸ்மெண்ட் என்ற பெயரில்  தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின்  இயக்குனராக முருகன் என்பவர் இருந்து வந்தார். வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக இந்த நிறுவனம் மூலம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

இதை பார்த்து தொடர்பு கொண்டவர்களிடம் விசா வாங்கி தருவதாக கூறி கட்டணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூலூர் முத்து கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த தாரணி என்பவர் நார்வே நாட்டில் வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து  கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  விசாவிற்காக முருகனை அணுகியுள்ளார்.

அவர் 6 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறிய நிலையில்,  10,000 ரூபாயை முன் பணமாக கொடுத்த தாரணி, பின்னர் 5.90 லட்ச ரூபாயை பல்வேறு தவணைகளாக ஆன்லைன் அக்கவுண்ட் மூலம் முருகனுக்கு அனுப்பி வைத்தார். பணம் கொடுத்து வெகு நாட்கள் ஆகியும் விசா வாங்கி கொடுக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முருகனிடம் பல முறை கேட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாரணி, இது  குறித்து கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த முருகனை கைது செய்தனர்.

Must Read : வீட்டின் சுற்றுசுவரில் மூவர்ண தேசியக்கொடி - முன்னாள் இராணுவீரர் அசத்தல்

இதேபோல பலரிடமும் முருகன் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Crime News, Fraud, Job

அடுத்த செய்தி