கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது ஐசிஎல் ஃபின்கார்ப் (ICL fincorp) நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் தங்க நகைகளை அடமானமாக பெற்றுக்கொண்டு அவற்றுக்கு பணம் வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் கோவை குனியமுத்தூர் கிளையின் தலைவராக கார்த்திகா என்பவரும், மேலாளராக சரவணன் என்பவரும், உதவி மேலாளராக சத்யா என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த நிறுவனத்தில் வழக்கமான தணிக்கை நடைபெற்றது. அப்பொழுது அந்த நிறுவன கிளையில் போலி தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கிளையில் உள்ள அனைத்து நகைகளையும் தணிக்கை செய்து பார்த்த பொழுது, வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி 598 கிராம் போலி தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டு அதற்கு ஈடாக 40.80 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
அதன்படி, வாடிக்கையாளர்களின் பெயரில் குனியமுத்தூர் கிளை ஐசிஎல் ஃபின்கார்ப் (ICL fincorp) நிறுவனத்தின் கிளை தலைவர் கார்த்திகா, மேலாளர் சரவணன், உதவி மேலாளர் சத்யா ஆகியோர் கூட்டு சேர்ந்து 40.80 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து மோசடி செய்ததும் தணக்கையில் தெரிய வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனையடுத்து அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் வினோத்குமார் கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்தார். புகாரன் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் சத்யா என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான கிளை தலைவர் கார்த்திகா மற்றும் மேலாளர் சரவணன் ஆகிய இருவரையும் குற்றபிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
Must Read : சிறுவன் ஓட்டிச்சென்ற பைக் மோதி 3 வயது குழந்தை பலி: சிறுவன், தந்தை கைது
வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி தனியார் நிறுவன ஊழியர்களே 40.80 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்திருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Fraud, Gold loan