தங்க நகைகளை விற்கவும், அடகு வைத்த நகைகளை மீட்கவும் ஏராளமான நிறுவனங்கள் சமீப காலமாக தொடங்கப்பட்டுள்ளன. நகை மீட்பு விளம்பரத்தை பயன்படுத்தி நூதன முறையில் பணமோசடி செய்துள்ளார் இளைஞர் ஒருவர். மோசடி நபர் சிக்கியது எப்படி?
கோவையை சேர்ந்தவர் 35 வயதான அசோக்குமார். வி - கோல்ட் நிறுவனத்தின் பழனிவேலுவிற்கு செல்போனில் தொடர்பு கொண்ட அசோக்குமார், இந்தியன் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் நகைகள் அடகு வைத்துள்ளதாகவும், இதற்கான தொகை 13 லட்சத்தில் 10 லட்சத்தை செலுத்தி விட்டதாகவும், மீதம் ரூ.3.5 லட்சத்தை இந்தியன் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பணத்தை ஆன்லைனில் அனுப்புமாறு நம்பிக்கையை ஏற்படுத்தும் வார்த்தையில் பேசியுள்ளார். நகைகள் அடகு வைத்ததற்கான ரசீதுகளையும் வாட்ஸ்அப் வீடியோவில் காட்டியுள்ளார். இதை நம்பிய பழனிவேலு வாடிக்கையாளரை விட்டு விடக்கூடாது என ஆன்லைனில் பணத்தை அசோக்குமாருக்கு அனுப்பினார்.
தொடர்ந்து பணத்தை அனுப்பிய பழனிவேலு டிபி ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றபோது அசோக்குமார் அங்கு இல்லை. வங்கிக்குள் சென்று விசாரித்த போது அசோக் குமார் என்ற நபர் இங்கு வரவில்லை என்றும் அவருக்கு இங்கு வங்கிக் கணக்கு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அசோக்குமார் காட்டிய ரசீதுகள் போலி ரசீதுகள் எனவும் வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதேப்போல மேலும் இரு நகை அடகு மீட்பு நிறுவனங்களை அசோக்குமார் ஏமாற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மோகன்ராஜ் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாயும், மணிகண்டன் என்பவரிடம் மூன்று லட்சம் ரூபாயும் அசோக்குமார் மோசடி செய்திருப்பது தெரிந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒரே நாளில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துவிட்டு அசோக்குமார் தப்பி சென்று விட்டார். இதையடுத்து, கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரணை நடத்தி அசோக்குமாரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பி.டெக்., படித்துள்ளதும் பட்டாசு வியாபாரத்தில் முதலீடு செய்து நஷ்டமடைந்ததை தொடர்ந்து மோசடி வேலையில் இறங்கியதும் தெரியவந்தது.
அசோக்குமார் மீது மேலும் பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. அசோக் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.