முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை வெள்ளியங்கிரி மலைத்தொடரில் பற்றி எரியும் காட்டுத்தீ..

கோவை வெள்ளியங்கிரி மலைத்தொடரில் பற்றி எரியும் காட்டுத்தீ..

பற்றி எரியும் காட்டுத்தீ

பற்றி எரியும் காட்டுத்தீ

Coimbatore News : கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீயை வனத்துறையினர் பழங்குடி மக்கள் உதவியுடன் அணைக்கும் பணியில் 2வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலை தொடரின் 4 மற்றும் 5வது மலைகளுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டு தீ பரவியது. பின்னர் சுமார் 3 ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியது. தகவலறிந்த சுமார் 30க்கும் மேற்பட்ட போளுவாம்பட்டி வனத்துறை ஊழியர்கள், உள்ளூர் பழங்குடி மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியை துவங்கினர். தற்போது வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் சென்று வரும் சூழலில் 7வது மலையில் இருந்து சுவாமி தரிசனம் முடித்து கீழே வரும் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கியுள்ளனர்.

மேலும் காட்டு தீ காரணமாக வெள்ளியங்கிரி நுழைவு வாயிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையின் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இரவு முழுவதும் போராடி 4வது மலையில் பற்றிய தீயை முழுமையாக அணைத்தனர். இதனிடையே தீயணைப்பு துறையினரும் வெள்ளியங்கிரி மலையின் 5வது மலையில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை அணைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

செய்தியாளர் : வைரபெருமாள் - கோவை

First published:

Tags: Coimbatore, Local News