Home /News /coimbatore /

கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ பிளாஸ்டிக் கவர்: நடவடிக்கை எடுக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை

கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ பிளாஸ்டிக் கவர்: நடவடிக்கை எடுக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை

பொள்ளாச்சி -  டாப்ஸ்லிப் யானைகள்

பொள்ளாச்சி - டாப்ஸ்லிப் யானைகள்

Pollachi | பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப் பகுதியில் கும்கி யானைகளின் உடல் மீது பிளாஸ்டிக் கவர் பேப்பர்களை போர்வைப்போல் போத்தி வனத்துறையினர் யானைகளை காட்சி பொருளாக்கியுள்ளனர். இதனை அறிந்த வன ஆர்வலர்கள் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India
    மலைவாழ் மக்கள் தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு நாளான நேற்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் கணேசன் துவக்கி வைத்தார். 

    இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் கவரால் ஆன பிளக்ஸ் கவரை கும்கி யானைகள் மீது போர்வை போல் போர்த்தியிருந்தனர். யானைகளை தயார் செய்யும் பொழுது பிளக்ஸ் பிளாஸ்டிக் கவர்களையும் அதில் வெளிப்படும் வாசனையையும் கண்டு அச்சம் ஏற்பட்டு இரண்டு கும்கி யானைகள் அந்தக் கூட்டத்தில் இருந்து மிரண்டு வனப்பகுதிக்குள் ஓடியது.

    பின்னர் கும்கி யானைகளை பாகன்கள் சமாதானப்படுத்தி மேலும் கட்டாயப்படுத்திய நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள சதுரங்க பலகையை சுற்றிவர யானைகளை வனத்துறையினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் டாப்ஸ்லிப் பகுதியை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகளிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.



    மேலும் டாப்ஸ்லிப் வனப்பகுதியில் கும்கி யானைகளை துன்புறுத்தி பிளாஸ்டிக் கவர்களை அதன்மேல் போர்த்தி பலம்மிக்க கும்கி யானைகளை ஒரு காட்சி பொருளாக்கி உள்ளனர் என வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



    Also see... போரூர் அருகே காரில் சென்ற பெண் கூட்டு பலாத்காரம்.. 6 பேர் கைது

    எனவே இந்திய வனச் சட்டம் 1972 பிரிவின் கீழ் இது தண்டனைக்குரியதாக உள்ளதாகவும் மேலும் வனப்பகுதிக்குள் உள்ள யானைகளுக்கு பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர்களை போர்த்தி யானைகளை துன்புறுத்திய ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பி வருகின்றனர்.

    செய்தியாளர்: ம.சக்திவேல்..பொள்ளாச்சி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chess Olympiad 2022, Elephant, Pollachi

    அடுத்த செய்தி