ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பருவநிலை மாறி பெய்யும் தொடர் மழையால் அழுகிய பூக்கள்... விவசாயிகள் வேதனை...

பருவநிலை மாறி பெய்யும் தொடர் மழையால் அழுகிய பூக்கள்... விவசாயிகள் வேதனை...

கருகிய பூக்கள்

கருகிய பூக்கள்

Coimbatore | பருவநிலை மாறி பெய்யும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வந்தி பூ, கோழிகொண்டை பூக்கள் அழுகி கருகியதால் அதிக விலை கிடைத்தும் பூக்கள் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார  பகுதியில் பெரும்பாலான இடங்களில் சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை, உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். இங்கு பருவ நிலைக்கு ஏற்றார் போல் விவசாயம் செய்து வருகின்றனர்.

  இந்நிலையில் கோவை வடிவேலம்பாளையம் பகுதியில் சின்ன வெங்காயத்திற்கு மாற்றாக ஓண பண்டிகை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை எதிர்நோக்கி செவ்வந்திப் பூக்கள், கோழி கொண்டை பூக்களை அப்பகுதியில் பெரும்பாலும் இடங்களில் நடவு செய்தனர்.

  பூக்களை பறிக்க ஆயத்தமாக இருக்கும் தருவாயில் கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பூக்களின் நாற்று பகுதி வரைக்கும் தண்ணீர் தேங்கி நின்று அழுகியது. அதனால்  ஓணம் பண்டிகைக்கு பூக்கள் பறிக்க முடியாமல் அப்படியே விட்டனர். அதேபோல எஞ்சியுள்ள பூ செடிகளையும் காப்பாற்றும் வகையில் மருந்து அடித்து நன்கு பராமரித்து வந்தனர்.

  ஆயுத பூஜை நெருங்கி வருவதால் பூக்கள் நல்ல விளைச்சல் ஆகி எதிர்பார்த்ததை விட பூக்கள் பெரிதாகவும் பந்து போல காட்சி அளித்தது. அதனால் ஆயுத பூஜைக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால் மீண்டும் செடிகள் நாற்று வரைக்கும் தண்ணீர் தேங்கி நின்றது.

  இதில் மீண்டும் செடிகள் அழுகி கருகியதால் செய்வதறியாமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர். அதேபோல பருவநிலை மாறி மழை பெய்து வருவதால் இது போன்ற நஷ்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்றனர். ஆயுத பூஜை சமயத்தில் பூக்களின் விலை கிலோ 300 ரூபாய்க்கு வரை விற்பனையாகும் நிலையில் பூக்கள் கருதியதால் வியாபாரிகளுக்கு பூக்கள் கொடுக்க முடியாமலும் கூலியாட்களுக்க் சரியான முறையில்  பணம் தர முடியாமலும் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

  Also see...நின்று நிதானமாக பைக்கை திருடி சென்ற திருடன்...

  மழை காரணமாக செடிகள் கருகி அழுகி வருவதால் இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறையினர் பார்வையிட்டு நஷ்டம் அடைந்ததற்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  செய்தியாளர்: வைரப்பெருமாள் அழகுராஜன், கோயம்புத்தூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Coimbatore, Farmers