Home /News /coimbatore /

வால்பாறையில் கனமழை.. சோலையாறு அணை நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வால்பாறையில் கனமழை.. சோலையாறு அணை நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சோலையாறு அணை நிரம்பியது

சோலையாறு அணை நிரம்பியது

Sholayar Dam | பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தற்பொழுது அணைக்கு நீர் வரத்து 6916 கன அடியாகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 5423 கன அடியாகவும் உள்ளது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வால்பாறை பகுதி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கோவை மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் பொள்ளாச்சி ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி எனப்படும் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை கவர்கள் சக்தி எஸ்டேட் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    Also see... எர்ணாகுளம்: நடுரோட்டில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

    குரங்கு அருவி எனப்படும் கவி அருவி


    தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு யாரும் அருவிக்கு செல்லாத வகையில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே, அருவியில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக ஆழியார் அணைக்கு செல்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஆழியார் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 120 அடி கொண்ட ஆழியார் அணை தற்பொழுது 96 அடி எட்டியுள்ளது.

    செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Falls, Heavy Rainfall

    அடுத்த செய்தி