ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

தீபாவளி விற்பனைக்கு டாஸ்மாக்கிற்கு டார்க்கெட் வைப்பதா... கடையை மூடுங்க- தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

தீபாவளி விற்பனைக்கு டாஸ்மாக்கிற்கு டார்க்கெட் வைப்பதா... கடையை மூடுங்க- தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் பேட்டி

அன்புமணி ராமதாஸ் பேட்டி

Anbumani Ramadoss | தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக்கிற்கு  தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை ஏற்க முடியாது எனவும், இலக்கு நிர்ணயம் செய்து இருப்பது வெட்ககேடு எனவும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக்கிற்கு  தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை ஏற்க முடியாது எனவும்,  தீபாவளிக்கு முந்தய நாள், அடுத்த நாள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனவும் பா.ம.க தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திறந்து வைத்தார். பின் அவர் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில், “நேற்று பல்லடத்தில் மக்களை சந்தித்து  குறைகளை கேட்டறிந்தேன். விசைத்தறிகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதால் பல்லடத்தில் மட்டும் 60 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்படும் நிலை இருக்கிறது.தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், கூடுதலாக விசைத்தறிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என கூறிய அவர், ‘பண்டிகை காலமான தற்போது ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. இதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.  மின் கட்டண பிரச்சனைக்கு தீர்வாக மாதாந்திர மின்கட்டணம் கணக்கிட வேண்டும். திமுக வாக்குறுதியில் மாதம் தோறும் மின் கணக்கீடு என சொல்லியதை இன்னும்  நிறைவேற்றவில்லை’ என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க : கோவையில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் அறிமுகம்! - சிறப்புகள் என்ன? 

தொடர்ந்து பேசிய அவர்,  “அத்திகடவு அவினாசி திட்டத்திற்கு கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது.கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை. தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். பாண்டியாறு புன்னம்புழா, ஆனைமலை நல்லாறு திட்டம் ஆகியவை இந்த பகுதி  மக்களின் நீண்ட கால கோரிக்கை. கேரள அரசிடம் பேசி இந்த திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீர் பாசன திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காவிரியில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 530 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகி  இருக்கிறது.

திமுக, அதிமுக இரு கட்சிகளும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு லட்சம் கோடி நீர் மேலாண்மைக்கு என தனியாக ஒதுக்கீடு செய்யவேண்டும். நிலுவையில் உள்ள திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.பின்னலாடை தொழில் அதிகம் உள்ள இந்த பகுதியில் நூல்விலை உயர்வால் ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். இந்தியாவிற்கு அதிக அளவில் அந்நிய செலவானி கொங்கு மண்டலத்தில் இருந்து கிடைக்கிறது. இந்த பகுதிக்கு மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசு கடிதம் எழுதுவதோடு இல்லாமல் இதை வலியுறுத்த வேண்டும்’ என கூறினார்.

இதையும் படிங்க : போடாத சாலைக்கு போலி பில்.. ரூ.8.40 லட்சம் சுருட்டல்.. பஞ்சாயத்து தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

தீபாவளிக்கு டாஸ்மாக்கிற்கு இலக்கை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளதை ஏற்க முடியாது என்று கூறிய அன்புமணி ராமதாஸ், ‘இலக்கு நிர்ணயம் செய்து இருப்பது வெட்ககேடு. தீபாவளிக்கு முந்தய நாள், அடுத்த நாள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் என்பது மாநில உரிமைக்கு எதிரானது. இன்றைய சூழலில் இது பொருந்தாது.  இங்கிருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் நம் குழந்தைகள் படிக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் நமது மருத்துவமனைகளில் டாக்டர்கள் இருக்கமாட்டார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் இணைப்பு மொழியாக இந்தி இருக்கும்.

இதையும் படிங்க : 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. பாடம் திட்டம் திணிப்பா? கோவையில் பள்ளி மீது குவியும் அடுக்கடுக்கான புகார்கள்

இதனால் பாதிப்பு இருக்காது என பா.ஜ.க சொல்கிறது. 22 அலுவல் மொழிகளில் ஒன்று இந்தி, ஏன் இந்தியை திணிக்க வேண்டும். இந்தி அவசியம் என்றால் கற்றுகொள்வார்கள், திணிக்க கூடாது. மத்திய அரசு பல வகைகளில் இந்தியை  திணிக்க  செய்ய முயல்கிறது. இந்தி திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்” என கூறினார்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Deepavali, Diwali, PMK, Pmk anbumani ramadoss, Tasmac