Home /News /coimbatore /

நட்சத்திர விடுதியில் ஜோடி நடனம் ஆட அனுமதிக்காததால் ரகளை.. பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு

நட்சத்திர விடுதியில் ஜோடி நடனம் ஆட அனுமதிக்காததால் ரகளை.. பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு

கோவை

கோவை

இது குறித்து நட்சத்திர விடுதியின் கணக்காளர் விஷ்வபாரதி(24) அளித்த புகாரின் பேரில், லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரிஷ்ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Tamil Nadu
    கோவை மாவட்ட ஆட்சியர் கேம்ப் ஆபீஸ் எதிரே உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஜோடி நடனத்திற்கு அனுமதிக்காததால் காவல்துறை முன்பே ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி முன்பு நான்கு நபர்கள் காவல்துறை முன்பே ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள பப்பிஸ் நட்சத்திர விடுதியில் நேற்று சனிக்கிழமை சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தம்பதிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    இந்த நிலையில் நட்சத்திர விடுதிக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரில் வந்த ஆண்கள் நான்கு பேர் நிகழ்ச்சியில் அனுமதிக்குமாறு நட்சத்திர விடுதி பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ALSO READ | “மின்கட்டண உயர்வு.. வேறு வழியில்லை" - தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்

    ஆனால் பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் பாதுகாவலர்களை தாக்கினர். தொடர்ந்து மற்ற பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றதால் தகராறு மோதலாக மாறியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தகராறில் ஈடுபட்ட 4 பேரை அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அங்கேயே காவல்துறையினரிடமும் ஆபாச வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சொகுசு காரில் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து நட்சத்திர விடுதியின் கணக்காளர் விஷ்வபாரதி(24) அளித்த புகாரின் பேரில், லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் ஜான்சன் என்பவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Coimbatore, Crime News, FIR Filed, Star hotel

    அடுத்த செய்தி