ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு: தோப்பு கரணம் போட்டு பிள்ளையாரிடம் மனு கொடுத்த விவசாயிகள்!

ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு: தோப்பு கரணம் போட்டு பிள்ளையாரிடம் மனு கொடுத்த விவசாயிகள்!

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

தோப்புக் கரணம் போட்டு விநாயகரை வழிபட்டதுடன், விநாயகர் கோயிலில் வைத்து மனுவை வைத்து வலியுறுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து 34 கிலோமீட்டர் தொலைவுக்கு ஊர்வலமாக வந்த விவசாயிகள், புலியகுளம் முந்தி விநாயகரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்காக அன்னூர், மேட்டுப்பாளையம் வட்டங்களுக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில் 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அன்னூரில் உள்ள மன்னீஸ்வரர் கோயிலிலிருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு விவசாயிகள் நேற்று ஊர்வலமாக சென்றனர். செல்லும் வழியில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முழக்கங்களை எழுப்பினர். மேலும், காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

புலியகுளம் பகுதிக்கு வந்த விவசாயிகள், பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் தோப்புக் கரணம் போட்டு விநாயகரை வழிபட்டதுடன், விநாயகர் கோயிலில் வைத்து மனுவை வைத்து வலியுறுத்தினர். தங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு எந்தப் பதிலையும் அளிக்காததால், விநாயகரிடம் கோரிக்கை வைத்ததாக விவசாயிகள் வலியுறுத்தினர்.

First published:

Tags: Coimbatore, Farmers Protest, Textiles