Home /News /coimbatore /

20 ஆண்டுகளில் இல்லாத தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்: பொள்ளாச்சி ஜெயராமன் வேண்டுகோள்

20 ஆண்டுகளில் இல்லாத தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்: பொள்ளாச்சி ஜெயராமன் வேண்டுகோள்

முன்னாள் தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் ஜெயராமன்

முன்னாள் தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் ஜெயராமன்

Coimbatore District : தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் தென்னை உற்பத்தியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தேங்காய் விலை வீழ்ச்சியை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு ரூ105.90 பைசாவிற்கு கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் பொள்ளாச்சி ராஜேஸ்வரி திடலில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்..
    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, “ தமிழகத்தில் கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோதும் கூட தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்படவில்லை. பள்ளி கல்லூரிகள் விடுமுறை காலத்தில், உணவு விடுதிகள் இல்லாத போதும், திருமண நிகழ்ச்சிகள் இல்லாத போதும் கூட தேங்காய் விலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஆனால் 20 ஆண்டுகள் இல்லாத விலை வீழ்ச்சி ஏற்பட்டு தற்போது தேங்காய் ரூ 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல தேங்காய் மட்டை 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது 40 பைசாவிற்கு விற்பனை ஆகிறது. இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது” என ஜெயராமன் குற்றம்சாட்டினார்.

    மேலும்,” தென்னை நார் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நார், காயர்பித்து போன்ற ஏற்றுமதி பொருட்கள் கண்டெய்னர் வசதி இல்லாததால் தேக்கமடைந்து கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக தென்னை நார்பொருள்கள் ஏற்றுமதி செய்ய கண்டெய்னர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.

    அதனைத் தொடர்ந்து, “ விவசாயிகளிடமிருந்து பரவலாக, முறையாக கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை. உடனடியாக பணம் வழங்க வேண்டும் கொள்முதல் செய்த கொப்பரைக்கு பணம் வழங்காததால் விவசாயிகள் வெளிமார்க்கெட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

    Also see... முகநூல் காதலியை தேடி சென்ற இளைஞர் மாயம்

    பின்னர், “அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் கொப்பரை விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கொப்பரை கொள்முதல் காலத்தை நீடித்து உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டங்களை  நடத்துவார்கள்” என்று தெரிவித்தார்.

    செய்தியாளர்: ம.சக்திவேல்..பொள்ளாச்சி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Coconut, Coimbatore, Pollachi, Pollachi Jeyaraman

    அடுத்த செய்தி