Home /News /coimbatore /

மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி மோசடி.. ரூ.6 லட்சம் ஏமாற்றிய போலி ஐபிஎஸ் அதிகாரிக்கு வலை

மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி மோசடி.. ரூ.6 லட்சம் ஏமாற்றிய போலி ஐபிஎஸ் அதிகாரிக்கு வலை

ஆந்திராவைச் சேர்ந்த ராஜகுரு - போலி ஐபிஎஸ்

ஆந்திராவைச் சேர்ந்த ராஜகுரு - போலி ஐபிஎஸ்

Coimbatore cheating case | கோவையில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ஓட்டல் உரிமையாளரிடம் 6 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை சௌக்கார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித். இவர் சென்னை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் ஓட்டல் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த ராஜகுரு (வயது 32) என்பவர் அறிமுகமானார். தன்னை ஐபிஎஸ் அதிகாரி என கூறிக்கொண்ட அவர், பணியாற்றி ஓய்வு பெற்ற  மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை தனது உறவினர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஃபே வைத்து நடத்துவதற்கு அனுமதி பெற்று தர உதவி செய்வதாக முகேஷ் குமார் புரோகிதிடம் ராஜகுரு கூறியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் எண் என போலியான ஒரு எண்ணை அவரிடம் கொடுத்துள்ளார். அந்த எண்ணில் கோவை மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தையும், பெயரையும் வாட்ஸ் அப்பில் போலியாக பயன்படுத்தி, அவரிடம் சாட் செய்து வந்துள்ளார்.

போலியான வாட்ஸ் அப் சாட்டிங்கை உண்மை என நம்பிய முகேஷ் குமார் புரோகித்திடம், ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், நேரடியாக பணம் வாங்கமாட்டார்கள் என்பதால் தன்னிடம் பணம் கொடுத்தால் அவர்களுக்கு கொடுத்து அனுமதி பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னையில் இருந்து முகேஷ் குமார் புரோகித் கோவைக்கு புறப்பட்டு வந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்த ராஜ குருவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது 1.5 லட்ச  ரூபாய் பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்குவதற்காக கொடுத்துள்ளார்.

பின்னர் அடுத்த நாள்  13ஆம் தேதியன்று பந்தய சாலை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து 1 லட்ச ரூபாய் பணத்தையும்,  1,53,000 மதிப்பிலான இரு செல்போன்கள்  மற்றும் நட்சத்திர ஓட்டலுக்கான வாடகை 50,000 ஆகியவற்றையும் வாங்கியுள்ளார். மேலும் கோவையில் இருந்து சென்னை செல்ல விமான கட்டணம் என மொத்தம்  6 லட்சம் ரூபாய் பண செலவு செய்த முகேஷ்குமார் புரோகித் பின்னர் ராஜகுருவை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Also see... 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ்

தொடர்ந்து ராஜகுரு எண் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ராஜகுரு தன்னை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி இருப்பது முகேஷ் குமார் புரோகித்க்கு தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து முகேஷ் குமார் புரோகித் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மோசடியில் ஈடுபட்ட  ராஜகுரு என்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cheating case, IPS Officers, Kovai

அடுத்த செய்தி