ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

போடாத சாலைக்கு போலி பில்.. ரூ.8.40 லட்சம் சுருட்டல்.. பஞ்சாயத்து தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

போடாத சாலைக்கு போலி பில்.. ரூ.8.40 லட்சம் சுருட்டல்.. பஞ்சாயத்து தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

விமலா, வினோத் குமார்

விமலா, வினோத் குமார்

Coimbatore | இந்த மோசடி குறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் போஸ்டர் அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mettupalayam, India

  கோவை மேட்டுபாளையம் அருகே சாலை போட்டதுபோல் போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக பஞ்சாயத்து தலைவர் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ?

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்றம் அமைந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக விமலா என்பவரும், துணைத் தலைவராக வினோத் குமார் என்பவரும் உள்ளனர்.

  இந்த ஊராட்சி மொத்தம் 7 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியாகும். ஊராட்சிக்குட்பட்ட சேரன் நகரில் 2 வது பாலத்திலிருந்து மகாலட்சுமி அவென்யூவரை சாலையை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

  இதற்காக 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.  அதன்பிறகு நீண்ட நாட்களாகியும் அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறவில்லை. ஆனால் அப்பகுதியில் சாலை போடப்பட்டது போல் பில் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  சாலைப்பணிகள் முடிக்கப்பட்டது போல் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் ஒப்பந்ததாரருடன் சேர்ந்து சாலை அமைக்கப்பட்டதுபோல் புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

  இந்த மோசடி குறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் போஸ்டர் அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

  புகார்கள் குவிந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியதில் மோசடி அம்பலமானது. சாலை மேம்பாட்டுப் பணிக்காக ஒதுக்கப்பட்ட 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் மோசடி செய்யப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.

  ஊராட்சி மன்றத் தலைவர் விமலா, துணைத்தலைவர் வினோத்குமார், உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Read More: பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து; 10 மாதங்களுக்குப் பின் 2 பேர் மீது வழக்குப்பதிவு

   போடப்படாத சாலைக்கு போலி பில் தயாரித்து பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு அமைத்து பணத்தை சுருட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: யோகேந்திரன்

  Published by:Srilekha A
  First published:

  Tags: Coimbatore