Home /News /coimbatore /

ஈமு கோழியை வைத்து தமிழகத்தில் பலரை ஏமாற்றிய பண்ணை உரிமையாளர்.. இவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா?

ஈமு கோழியை வைத்து தமிழகத்தில் பலரை ஏமாற்றிய பண்ணை உரிமையாளர்.. இவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா?

செல்வகுமார் - 10 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்றவர்

செல்வகுமார் - 10 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்றவர்

Coimbatore | ஈரோட்டில்  ஈமு கோழி பண்ணை நடத்தி 5.56 கோடி ரூபாய் மோசடி செய்த ஈமு கோழிப்பண்ணை  உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணையும் 5.60 கோடி ரூபாய் அபராதமும் விதித்து முதலீட்டாளர் நல நீதிமன்றம்  உத்திரவிட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோஜாநகர் பகுதியில் செல்வகுமார் என்பவர்  சி.என்.எஸ். ஈமு கோழி பண்ணை நடத்தி வந்தார். ஈமு கோழி வளர்த்தால் நல்ல லாபம் பெற முடியும் என பொது மக்களிடம் விளம்பரம் செய்து இரண்டு விதமான திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 140 முதலீட்டாளர்கள் சுமார் 5 கோடிக்கு மேல் பணத்தை முதலீடு செய்தனர்.

ஆனால் அறிவித்த திட்டங்களின் படி,  ஊக்கத்தொகை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2013 ம் ஆண்டு  ஈரோடு  பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இது குறித்து  ஈமு கோழி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு  கோவை முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Also see...சுதந்திரத் தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்.!

இந்த மோசடி வழக்கில்  இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஈமுகோழி நிறுவன உரிமையாளர் செல்வக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டணையும், 5.60 கோடி அபராதமும்  விதித்து  நீதிபதி ரவி உத்திரவிட்டார். இந்த அபராத தொகையினை பாதிக்கப்பட்ட 140 பேருக்கும் பிரித்து வழங்கவும் உத்திரவிட்ட நீதிபதி ரவி, மீதமுள்ள நான்கு பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து ஈமுகோழி பண்ணை உரிமையாளர் செல்வகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cheating case, Chicken, Coimbatore, Crime News

அடுத்த செய்தி