ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை தங்கநகை பட்டறையில் 1 கிலோ தங்க நகைககளை திருடிய ஊழியர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

கோவை தங்கநகை பட்டறையில் 1 கிலோ தங்க நகைககளை திருடிய ஊழியர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

ஊழியரே நகையை திருடும் சிசிடிவி வீடியோ

ஊழியரே நகையை திருடும் சிசிடிவி வீடியோ

Coimbatore | கோவையில் தங்கநகை பட்டறையில் ஊழியராக பணிபுரிந்த வட மாநில இளைஞர் 1 கிலோ தங்க நகைகள் திருடிச்சென்ற  சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ராஜ வீதியை அடுத்த சண்முகாநகர் பகுதியில் மோகன் டை என்ற பெயரில் மோகன் குமார் என்பவர்  தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.  12 வருடங்களுக்கு மேலாக அந்த  தங்கநகை பட்டறையில் மொத்த வியாபாரமாக தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார். இவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரமோத் வித்தால் போச்லே (20 ) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில்  நேற்று காலை 8.30 மணி அளவில் பட்டறை திறக்கும் முன்பு , சீக்கிரம் கடைக்கு வந்த பிரமோத் பட்டறையின் சாவியை எடுத்து, அங்கு  வைத்திருந்த 1 கிலோவிற்கும் அதிகமான தங்க நகை மற்றும் தங்க கட்டிகளை  திருடி ,பையில் போட்டு எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

Also see... திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டண சேவை டிக்கெட்டுகள் - ஆன்லைனில் நாளை வெளியீடு

கடையின் சாவியை வைக்கும் இடத்தையும், கடை திறக்கும் நேரத்தை நன்கு தெரிந்துக்கொண்டு மற்றவர்கள் வரும் முன்பாக பட்டறைக்கு சென்று நகைகளை திருடி சென்றுள்ளார். இந்த திருட்டு சம்பவம் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில்  பதிவாகி உள்ளது.  இந்நிலையில் நகை திருடு போனதை அறிந்த பட்டறை உரிமையாளர் மோகன் குமார்  வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

' isDesktop="true" id="822152" youtubeid="cnBWaosdhkc" category="coimbatore">

அந்த  புகாரின் பேரில்  50 லட்சத்து 50 ஆயிரத்து மதிப்பிலான 1067.850 கிராம் தங்க நகைகள் திருடி சென்றதாக பிரமோத் வித்தால் போச்லே  மீது வழக்கு பதிவு செய்து வெரைட்டி ஹால் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகையை திருடியவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் போலிசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நகைகளை திருடி செல்லும் சிசடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

First published:

Tags: CCTV, Coimbatore, Crime News, Gold Theft