முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / சண்டையிட்ட காட்டு யானைகள்... பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் வரிசைகட்டிய வாகனங்கள்..!

சண்டையிட்ட காட்டு யானைகள்... பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் வரிசைகட்டிய வாகனங்கள்..!

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சண்டையிட்ட யானைகள்

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சண்டையிட்ட யானைகள்

Pollachi Elephants Fight | தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் யானை சுற்றி திரிவதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அச்சமடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pollachi, India

ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த சுள்ளி கொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை கடந்த சில தினங்களாக ஆழியார், வால்பாறை சாலை பகுதியில் செல்லும் மக்களையும் வாகனங்களையும் அச்சுறுத்தி வருகிறது.

கடந்த வாரத்தில் நவமலை மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்த யானை வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  இரண்டு சொகுசு கார்களை தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் ஆழியார் மற்றும் நவமலை பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

குடியிருப்பு மற்றும் வால்பாறை சாலையில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி உலா வரும் ஒற்றைக்காட்டு யானை இரவு நேரத்தில் மீண்டும் வனத்தை விட்டு வெளியேறி வால்பாறை சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது வால்பாறை சாலையில் எதிரே வந்த மற்றொரு காட்டு யானையை கண்ட சுள்ளி கொம்பன் அந்த யானையுடன் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை சாலையில் நள்ளிரவில் இரண்டு காட்டு யானைகளும் நீண்ட நேரமாக நின்றதால் வால்பாறை நோக்கி சென்ற அரசு பேருந்து மற்றும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இரவு ரோந்து பணியில் இருந்த வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் சாலையில் சண்டையிட்டுக் கொண்டு நின்றிருந்த இரண்டு யானைகளையும் வனப்பகுதியில் விரட்டினர்.

இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு பகலாக தொடர்ந்து முழு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சக்திவேல்

First published:

Tags: Elephant