Home /News /coimbatore /

மின் கட்டணம்  அரசியல் ஆக்கப்படுகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து

மின் கட்டணம்  அரசியல் ஆக்கப்படுகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து

அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி

Coimbatore | ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது எனவும், மின் கட்டணத்திற்காக இன்று  ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடியவர்கள் நேற்று பத்திரிகைகளில் கட்டண விவரங்களை ஓப்பீடு செய்து வெளியிட்டுள்ள செய்தியை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும் எனவும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவைராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம், மதுக்கரை ஆகிய இரு நகராட்சிகளில் இன்று முதல்கட்டமாக  காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. 9104 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தில் பலன் அடைகின்றனர். காலை உணவாக கேசரி, ரவா உப்புமா, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் அதிகாரிகள் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். அப்போது முதல்வரின் காலை உணவு திட்டம் இன்று கோவையில்  துவங்கப்பட்டது எனவும், வீட்டில் சாப்பிடுவதை போல இருக்கின்றது என குழந்தைகள்  சந்தோசபடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடபபட வில்லை என்பது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சாலை பணிகளுக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், 125 சாலைகளுக்கு ரூ. 26 கோடி  நிதி ஒதுக்கீடு முதல்கட்டமாக  செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.  மேலும் வரும் மார்ச் மாதத்திற்குள் 200 கோடி நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், கோவை மாநகரில் பாதாள சாக்கடைக்கு விடுபட்ட பகுதிகளுக்கு  ரூ.177 கோடிக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவான ஒப்பீடுகளுடன் விளம்பர படுத்தபட்டுள்ளது. 2010 ம் ஆண்டு தமிழக மக்கள் செலுத்திய மின்கட்டணம்,  2017ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட மின்கட்டணம், 2022ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்ட கட்டணம் ஆகிய ஒப்பீடுகளுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.



இதை படித்து பார்த்தாலே விளங்கும் என தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில் 64 முதல்  138 விழுக்காடு வரை மின் கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். 2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி மின்நுகர்வோருக்கு எந்த கட்டணமும் இல்லை, 63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது என தெரிவித்த அவர், ஏழை மக்களுக்கு  பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

சிறு குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு உயர்த்த திட்டமிடப்பட்ட  கட்டணம் 3217 கோடி ரூபாயினை குறைத்து அரசு  நிர்ணயம் செய்து நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்த அவர்,சிறு ,குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு பிற மாநிலங்களுடன் ஓப்பிடுகையில் தமிழகத்தில்  குறைவான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

HT தொழிற்சாலைகளுக்கும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால்  தமிழகத்தில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணத்திற்காக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடியவர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

சில நேரங்களில் மின் கட்டணம்  அரசியல் ஆக்கப்படுகிறது என தெரிவித்த அவர்,விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த கட்டணம் தமிழகத்தில் தான் விதிக்கப்படுகிறது எனவும், மற்ற மாநிலங்களில் விசைத்தறிகளுக்குHT கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில்  விசைத்தறிகளுக்கு அந்த கட்டணம் இல்லை எனவும் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் விசைத்தறிகளுக்கு  எவ்வளவு கட்டணம் உயர்த்தினார்கள், இப்பொழுது எவ்வளவு உயர்த்தபட்டுள்ளது  என்பதை பார்க்க வேண்டும் எனக்கூறிய அவர்,  70 பைசா மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது எனவும், இந்தியாவிலேயே விசைத்தறிகளுக்கு குறைந்த கட்டணம் தமிழகத்தில் உள்ள விசைத்தறிவுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனறும் தெரிவித்தார்.



மேலும் இழுத்து மூட வேண்டிய  நிலையில் இருந்த மின் வாரியத்திற்கு அரசு மானியம் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், 25 விழுக்காடு மட்டுமே  மின் உற்பத்தி தமிழகத்தில்  செய்கிறோம். மற்றவற்றை வெளியில் இருந்து தான் வாங்குகின்றோம் என தெரிவித்த அவர்,2006 -11 ஆட்சியில் திட்டமிடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனறு தெரிவித்தார்.

வரும் டிசம்பர் மாதம் 800 மெகா வாட் மின் உற்பத்தி திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தார். மின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 316 துணை மின் நிலையங்கள் டெண்டர் நிலைக்கு வந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்த கேள்விக்கு, தமிழகம் முழுக்க 2016 ம் ஆண்டு போட்டியிட்டபோது தாக்கல் செய்த சொத்து மதிப்பையும் , 2021 ம்  ஆண்டு தாக்கல் செய்த சொத்து மதிப்பையும் ஆய்வு செய்தாலே 5 ஆண்டுகளில் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கின்றது தெரியவரும்.

Also see.. விருந்துக்கு சென்ற இடத்தில் விபரீதம்.. புதுமண தம்பதி தற்கொலை.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

திமுக தேர்தல் வாக்குறுதியினை  நிறைவேற்றி வருகின்றது. கடந்த ஆட்சியில்  தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தோம் அந்த வாக்குறுதி நிறைவேற்றபட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Electricity bill, Senthil Balaji

அடுத்த செய்தி