ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

“இபிஎஸ் யாருக்கும் அடிமை இல்லை.. அவர் சிங்கம்..” - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

“இபிஎஸ் யாருக்கும் அடிமை இல்லை.. அவர் சிங்கம்..” - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி

இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி

விலைவாசியை கட்டுப்படுத்தவில்லை என்றால் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சொந்த நாட்டை விட்டு ஓடிய நிலைதான் மு.க.ஸ்டாலினுக்கும் நடக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

எடப்பாடி பழனிசாமி யாருக்கும் அடிமை இல்லை எனவும் அவர் சிங்கம்போல இருப்பார் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக சொந்தம் கொண்டாடி வருவதாக விமர்சித்தார். கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் மதிமுகவினர் திமுகவிற்கு அடிமையாக இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி யாருக்கும் அடிமை இல்லை எனவும் அவர் சிங்கம்போல இருப்பார் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதேபோல் பொள்ளாச்சி அடுத்த நெகமம் போரூராட்சியில் எம்.எல்.ஏ ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஜெயராமன், “தமிழ்நாட்டில் கட்டுமான துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் உயர்வதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் இலங்கையில் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடியதால் அன்றைய அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆட்சி கலைந்து தன் குடும்பத்தோடு நாட்டை விட்டே வெளியேறினார். அதே போல தமிழகத்திலும் விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் குடும்பத்தோடு தமிழகத்தை விட்டு ஓட வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, EPS, SP Velumani