Home /News /coimbatore /

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதை திமுக எதிர்ப்பதில் உள்நோக்கம் உள்ளது: பொள்ளாச்சி ஜெயராமன் 

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதை திமுக எதிர்ப்பதில் உள்நோக்கம் உள்ளது: பொள்ளாச்சி ஜெயராமன் 

பொள்ளாச்சி ஜெயராமன் 

பொள்ளாச்சி ஜெயராமன் 

Pollachi | வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பதில் உள்நோக்கம் உள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டியுள்ளார்.

    தீரன் சின்னமலையின் 217 வது நினைவு தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தீரன் சின்னமலையின் திருஉருவபடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், “  ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது தான் அதிமுகவின் கொள்கை. அப்போதுதான் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க முடியும். மேலும் ஒரே நபருக்கு இரண்டு மூன்று இடங்களில் வாக்குரிமை இருக்கும் நிலையை தடுக்க முடியும். எனவே ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம்  வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.

    Also see... ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.5 லட்சம் இழந்த இளைஞர் தற்கொலை

    மேலும், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன்  இணைப்பதை திமுக எதிர்ப்பதில் உள்நோக்கம் உள்ளது. அதனால் அவர்கள் பயனடைவார்கள் என்பதால்தான் எதிர்க்கிறார்கள்” என அவர்  தெரிவித்தார்.

    செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Aadhar, ADMK, DMK, Pollachi, Pollachi Jeyaraman, Voters ID

    அடுத்த செய்தி