Home /News /coimbatore /

சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும், நரிகளுக்கும் என்ன வேலை.. கோவையில் திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..

சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும், நரிகளுக்கும் என்ன வேலை.. கோவையில் திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..

கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நீதித்துறையினருக்கான விருந்தினர் மாளிகையை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி திறந்து வைத்தார். இந்த நிகழ்வுக்கு கோவை  வந்த  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜரை வரவேற்கும் விதமாக கோவை நகரின் பல்வேறு இடங்களில் திமுகவினர்  போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும், நரிகளுக்கும் என்ன வேலை என குறிப்பிட்டு கோவை நகரின் பல்வேறு இடங்களில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நீதித்துறையினருக்கான விருந்தினர் மாளிகையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி திறந்து வைத்தார். இதில்  உயர்நீதிமன்ற நீதிபதிகள்  ஜி.ஆர். சுவாமிநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு கோவை  வந்த  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை  வரவேற்கும் விதமாக கோவை நகரின் பல்வேறு இடங்களில் திமுகவினர்  போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்


அந்த போஸ்டர்களில்"சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும், நரிகளுக்கும் என்னடா வேல?" என குறிப்பிட்டு இருப்பதுடன் அதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், நிதிஅமைச்சர் பி. டி .ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின்   புகைப்படங்களும் இடம் பெற்று இருக்கின்றது.

 
Published by:Raj Kumar
First published:

Tags: Coimbatore, DMK cadres, Minister Palanivel Thiagarajan

அடுத்த செய்தி