முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / இந்து மதம் குறித்து ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு : கடையடைப்பில் ஈடுபட்டதாக பாஜகவினர் 17 பேர் கைது

இந்து மதம் குறித்து ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு : கடையடைப்பில் ஈடுபட்டதாக பாஜகவினர் 17 பேர் கைது

ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு -

ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு -

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

இந்துகள் குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவை இந்துத்துவ அமைப்பினர் கடுமையாக எச்சரித்தும் , மன்னிப்பு கேட்கும் படியும் கூறி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூரில் இந்து முன்னணி அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்துக்கள் தொடர்பாக பேசியது சர்ச்சையானது. இதனிடையே ஆ.ராசா பேசியதற்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டது.

அன்னூரில் மருந்துகடை, அரிசிகடை, பூக்கடை உட்பட ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது.  அன்னூர் கடைவீதிகளில்  கடைகளை திறக்க கூடாது என கூறி வலம் வந்ததாக பா.ஜ.க வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு அன்னூர் அவிநாசி ரோட்டில் உள்ள மகரிஷி மஹால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடைக்கப்பட்ட கடைகள்

இதே போல அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. கடைகளை திறக்கலாம் என திமுகவினர் ஒருபுறம் பிரச்சாரம் மேற்கொண்டனர். முக்கிய கடைதெருக்களில் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கடை உரிமையாளர்களுக்கும், வணிகர் சங்கத்தினருக்கும் நம்பிக்கை கொடுத்து கடைகளை திறக்க வைக்கும் முயற்சியில் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர் : சு.குருசாமி

First published:

Tags: A Raja, DMK