Home /News /coimbatore /

வெள்ளலூர் பேருந்து  நிலையம் அவசியம்.. அதே இடத்தில் வரவேண்டும் - எஸ்.பி.வேலுமணி

வெள்ளலூர் பேருந்து  நிலையம் அவசியம்.. அதே இடத்தில் வரவேண்டும் - எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

'கோவை வெள்ளலூர் பேருந்து  நிலையம் 50%  கட்டிய நிலையில் அதை உள்நோக்கத்தோடு  நிறுத்தி இருக்கின்றனர்' - எஸ்.பி.வேலுமணி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக அரசு  எதுவும் செய்யவில்லை எனவும் ,கோவை வெள்ளலூர் பேருந்து  நிலையம் 50%  கட்டிய நிலையில்  அதை உள்நோக்கத்தோடு  நிறுத்தி இருக்கின்றனர் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் இன்று  மனு அளிக்க வந்தனர். சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10 முக்கிய பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கவனத்திற்கு கொண்டு வர முதல்வர் ஸ்டாலின்  அறிவுறுத்தி இருந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் எஸ். பி .வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜூனன், ஜெயராம், அமுல்கந்தசாமி , கந்தசாமி, அருண்குமார், தாமோதரன், செல்வராஜ் ஆகிய கோவை மாவட்டத்தில் உள்ள 9  அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர்  சமீரனிடம் இன்று மனு அளித்தனர்.

மனு அளித்த பின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சட்டமன்ற தொகுதியில் இருக்கும் 10 பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க கடிதம் வந்தது , அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இருக்கும் கோரிக்கைகள் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்துள்ளோம் என தெரிவித்தார்.

இதில் அதிகமான கோரிக்கைகள் கடந்த ஆட்சியில் அறிவிக்கபட்டவை என்று தெரிவித்த அவர், கோவை நகரில் சாலைகள் மோசமாக இருப்பதால்  பயணிக்க முடியாத நிலை இருக்கின்றது எனவும் இதை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வலியுறுத்தி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். மாநகராட்சி சாலைகள் மோசமாக இருப்பதால் மக்கள் சிரம்படுகின்றனர் என தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்ட500 சாலைகளை இந்த அரசு ரத்து செய்தது எனவும்,  அந்த சாலைகள் போடப்பட வேண்டும் எனவும் , அதிமுக ஆட்சியில் துவங்கிய மேம்பால பணிகளை வேகமாக முடிக்க  வேண்டும் எனவும் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

வெள்ளலூர் பேருந்து நிலையம் அதே இடத்தில் தொடர வேண்டும் , மெட்ரோ ரயில் திட்ட பணிகள் வேகப்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அனைத்து பணிகளும் வேகமாக முடிக்க வேண்டும். அத்திகடவு அவனாசி திட்டம் விரைவாக முடிக்க வேண்டும் என முக்கிய கோரிக்கைகளாக அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக கூறினார்.

ALSO READ | சிங்கப் பெண்களே! ஒரு தந்தையின் பேரன்போடு உடனிருப்பேன்..மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மெசேஜ்!

50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த காலங்களில் அதிமுக அரசு கொடுத்து இருந்தது எனவும், இவ்வளவு திட்டம் கொண்டு வந்த நிலையில் அவற்றை இவர்கள் தொடர வேண்டும் எனவும் தெரிவித்தார். இப்போது  இருக்கின்ற அரசு ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என தெரிவித்த அவர், பல பணிகள்  கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வெள்ளலூர் பேருந்து  நிலையம் 50 சதவீதம் கட்டிய நிலையில்  அதை உள்நோக்கத்தோடு நிறுத்தி இருக்கின்றனர் எனவும், ஆட்சியரிடம்  இந்த பணிகள் தொடர வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். இந்த பேருந்து நிலையம்  மக்களுக்கு அவசியமானது என தெரிவித்த அவர் ஏதோ காரணத்தால் நிறுத்தி இருக்கின்றனர். எந்த காரணமாக இருந்தாலும் பேருந்து நிலையம் அதே இடத்தில் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: DMK, SP Velumani

அடுத்த செய்தி