ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்டட் அளவிலான கலைப்போட்டிகள் மலுமிச்சம்பட்டி இசைக் கல்லூரியில் டிசம்பர் 17ஆம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. குரலிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 5 - 8, 9 - 12, 13 - 16 ஆகிய வயது பிரிவுகளில் சிறுவா்கள் பங்கேற்கலாம்.
டிசம்பர் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு குரலிசை, பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப் போட்டிகள் நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக கா்நாடக சங்கீதம் பயிலும் சிறுவா்கள் பங்கேற்கலாம். இதில், தமிழில் அமைந்த இசை வடிவங்களை பாட வேண்டும். பரதநாட்டியம், கிராமிய நடன போட்டிகளில் அதிகபட்சம் 3 நிமிடங்களுக்கு ஆட அனுமதிக்கப்படுவா். சினிமா பாடல்களுக்கான நடனம், குழு நடனம் ஆகியவற்கு அனுமதியில்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கிராமிய நடனப் போட்டியில் பாரம்பரிய கரகம், காவடி, பொய்கால் குதிரை போன்ற நடனங்கள் மட்டுமே ஆட வேண்டும். பிற்பகல் 2 மணிக்கு ஓவியப் போட்டிட் நடைபெறும். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்ளிட்ட தேவையான அனைத்து சாதனங்களையும் போட்டியாளா்களே கொண்டுவர வேண்டும். ஓவியப் போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும்.
Must Read : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்
பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் முதல் பரிசு பெறும் சிறுவா்கள் மாநில அளவிலான போட்டிட்களுக்கு அரசின் செலவில் அனுப்பப்படுவா். மேற்கண்ட போட்டிகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2610290 என்ற எண்ணில் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News