Home /News /coimbatore /

கோவையில் வேலை வாய்ப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் போராட்டம்

கோவையில் வேலை வாய்ப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் போராட்டம்

மாற்றுதிறனாளிகள் போராட்டம்

மாற்றுதிறனாளிகள் போராட்டம்

கோவையில் மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு, உதவி தொகை உள்ளிட்டவை வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, உதவித் தொகை, அரசு வேலை உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியபடி முற்றுகையில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள், இது தொடர்பாக மாற்று திறனாளிகள் துறையில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

வேலை வாய்ப்பு,  வீட்டு வசதியை கோரி பல முறை மனு அளித்து எந்த பயனும் இல்லை எனவும்,  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வி வழங்க வேண்டும் எனவும் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகளுடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

Also see... Also see... ட்விட்டர் யூஸர்களுக்கு ஹேப்பி நியூஸ்; இனி ட்வீட்டை எடிட் பண்ணலாம் .. எப்போது இருந்து தெரியுமா?

அப்போது   கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர் . மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, District collectors, Protest

அடுத்த செய்தி