முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ''இன்டர்நெட் க்ரைம்.. 10000 காவலர்கள்.. சைபர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை'' - டிஜிபி சொன்ன முக்கியத் தகவல்!

''இன்டர்நெட் க்ரைம்.. 10000 காவலர்கள்.. சைபர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை'' - டிஜிபி சொன்ன முக்கியத் தகவல்!

மாணவர்களிடம் உரையாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு

மாணவர்களிடம் உரையாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு

DGP Sylendra babu | மாணவர்கள் இணைய குற்றங்களில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைலேந்திர பாபு கேட்டுக்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களைத் தடுக்க 10 ஆயிரம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியின் 25-ம் ஆண்டுவிழா-வில் கலந்துகொண்ட டிஜிபி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாணவர்கள் இணைய குற்றங்களில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காவல் நிலையங்களில் மக்களின் புகாரை உடனுக்குடன் வாங்கி தீர்வுகாணும் வகையில், இரண்டாயிரத்து 300 பேர் வரவேற்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 600 காவல் உதவி ஆய்வாளர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், ஏற்கனவே பயிற்சி முடித்தவர்கள் பணியில் சேர உள்ளதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Coimbatore, Local News, Sylendra Babu